Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜ்நாத் சிங் விவசாய போராட்டங்களுக்கு ஆதரவளித்துப் பேசியுள்ளாரா - உண்மை என்ன?

ராஜ்நாத் சிங் விவசாய போராட்டங்களுக்கு ஆதரவளித்துப் பேசியுள்ளாரா -  உண்மை என்ன?

JananiBy : Janani

  |  13 March 2021 10:02 AM GMT

கடந்த ஆண்டு மத்திய அரசாங்கம் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், சமூக வலைத்தளத்தில் ஒரு பரபரப்பு வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது. அந்த வீடியோவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பேசியிருப்பது வலம்வருகிறது.


அந்த 10 நிமிட வீடியோவை பேஸ்புக் பயனாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் ராஜ்நாத் சிங் வேளாண் போராட்டங்களுக்கு ஆதரவை வழங்கி மத்திய அரசாங்கத்திற்கு ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜ்நாத் சிங் மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளார் என்னும் குற்றச்சாட்டுகள் முற்றலும் தவறானது ஆகும். அந்த வீடியோவில், ராஜ்நாத் சிங் அவர்கள் விவசாயிகளை ஒற்றுமையுடன் இருக்கவும் மற்றும் தானும் ஒரு விவசாயின் மகன் என்று கூறுவதையும் காணலாம். அவர் விவசாய தலைவரும் மற்றும் உத்தரப் பிரதேச முன்னாள் வேளாண் அமைச்சருமான மகேந்திர சிங் டிக்கட் அவர்களைப் பாராட்டுவதைக் காணலாம்.

இதனை வைத்து ஆராய்ச்சி செய்த போது, யூடூப் சேனல்களில் அதே வீடியோ இருப்பதைக் காண முடிந்தது. அந்த வீடியோவானது 2015 அக்டோபர் 6 இல் பா.ஜ.க யூடூப் சேனல்களில் பகிரப்பட்டிருந்தது. அந்த வீடியோவின் தலைப்பாக, "மகேந்திர சிங் டிக்கட் பிறந்த நாள் விழாவில் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களது உரை: 06.10.2015," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


அதன் பிறகு அந்த வீடியோ 2020 இல் ஜாட் செய்திகள் மற்றும் 2021 இல் BCR செய்திகளில் ஒளிபரப்பப்பட்டது. ராஜ்நாத் சிங் விவசாயிகள் குறித்தும் பேசும் வீடியோ 2015 இல் வெளியிடப்பட்ட நீண்ட வீடியோவாகவும். எனவே அவர் விவசாய போராட்டங்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யாகும் காரணம் போராட்டம் 2020 யில் தொடங்கியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News