Kathir News
Begin typing your search above and press return to search.

தெலுங்கனா பைன்சா கலவரத்துடன் தவறாகப் பரப்பப்பட்டு வரும் டெல்லி கலவர புகைப்படங்கள்!

தெலுங்கனா பைன்சா கலவரத்துடன் தவறாகப் பரப்பப்பட்டு வரும் டெல்லி கலவர புகைப்படங்கள்!

JananiBy : Janani

  |  14 March 2021 5:20 AM GMT

தெலுங்கானா மாநிலத்தில் பைன்சா பகுதியில் ஏற்பட்ட இரண்டு மதம்சார்ந்த கலவரத்தால் மார்ச் 8 முதல் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மீண்டும் சனிக்கிழமை (மார்ச் 13) இல் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பைக் மோதலால் மீண்டும் புதிய வன்முறை வெடித்ததது.


இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. அதில் முஸ்லீம்கள் பைன்சா இந்துக்களைத் தாக்கி, அவர்களது சொத்துக்களைச் சூறையாடியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல் புகைப்படத்தில் ஒரு தனிநபரைச் சுற்றி எரிக்கப்பட்ட கட்டிடங்கள், கடைகள் மற்றும் கார்கள் முதலியவை காணப்பட்டது. இரண்டாவது புகைப்படத்தில் ஒரு காவலதிகாரி தாக்கப்பட்ட பகுதியில் இருப்பதைக் காணமுடிந்தது.

மேலும் இந்த புகைப்படம் டிவிட்டர் பக்கத்தில், "தெலங்கானாவில் பைன்சா பகுதியில் உள்ள இந்து சமூகத்தினரைத் தாக்கி அவர்களின் சொத்துக்களை வேண்டுமென்றே சேதம் செய்து பெரிய வன்முறையைத் தூண்டியுள்ளனர். அந்த பகுதிக்கு விரைந்த காவல்துறை மீதும் முஸ்லீம் கும்பல் கற்களை வீசியுள்ளது," என்று கூறப்பட்டு பரப்பப்பட்டு வந்தது.

இது குறித்து உண்மையைக் கண்டறிந்த இந்தியா டுடே. இந்த செய்தி முற்றிலும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துள்ளது. பைன்சாவில் சமீபத்தில் கலவரம் ஏற்பட்டிருந்தாலும், இந்த புகைப்படம் உண்மையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி கலவரத்தில் எடுத்த புகைப்படம் என்று தெரிவித்துள்ளது.

சில பேஸ்புக் பயனாளர்களுக்கு இதே கூற்றுடன் புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த இரண்டு புகைப்படங்களும் உண்மையில் டெல்லி கலவரத்தில் கலவரக்காரர்கள் கடைகளை மற்றும் தெருக்களைச் சூறையாடிய போது எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

முதல் புகைப்படமானது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடத்திய கலவரத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது. பல ஊடகங்களிலும் கூட இது காணப்பட்டது. 2020 பிப்ரவரி 26 இல் இந்த புகைப்படத்தை AFP புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டது. இரண்டாவது புகைப்படமும் கூட அதே கலவரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வைரலாகி வரும் புகைப்படம் ஒரு ஆண்டுக்கு முன்னர் எடுக்கப்பட்டது, இதற்கும் பைன்சா வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை.


பைன்சாவில் மார்ச் 7 தற்செயலாக ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த வழிப்போக்கர் மீது இடித்ததால் வன்முறை கிளம்பியது.அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வன்முறையில் இரண்டு பத்திரிகையாளர்கள், மூன்று காவல்துறை உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News