Kathir News
Begin typing your search above and press return to search.

காசியாபாத் கோவில் சர்ச்சை- தவறான வைரல் புகைப்படம்.!

காசியாபாத் கோவில் சர்ச்சை-  தவறான வைரல் புகைப்படம்.!

JananiBy : Janani

  |  16 March 2021 1:00 AM GMT

மார்ச் 12 2021 சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் உத்தரப் பிரதேசம் காசியாபாத் மாவட்டத்தில் கோவிலில் தண்ணீர் குடிக்க வந்த சிறுவனை இந்து நபர் அடித்தது காணப்பட்டது. பின்னர் காவல்துறை வீடியோவில் சிறுவனை அடித்த நபரை ஸ்ரீங்கி நந்தன் யாதவ் என்று அடையாளம் கண்டு அவன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.




இந்த சம்பவத்திற்குப் பிறகு, சமூகவலைத்தளத்தில் சிறுவனின் உடம்பில் காயங்களுடன் இது ஆசிப் புகைப்படம் என்று குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. நெட்டிசன்கள் பலர், "என் சகோதரர் ஆசிப், உனக்குத் தாகமாக இருந்தால் மசூதிக்கு, சர்ச், குருதுவார முதலியவற்றிற்குச் செல்ல வேண்டும்," என்று கூற்றுடன் பகிர்ந்து வருகின்றனர். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.


இந்த புகைப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பார்த்தபோது, அதே புகைப்படம் ஆசிப் சம்பத்துக்கு முன்னேரே அக்டோபர் 9 இல் அம்ஜத் நாசர் என்ற பேஸ்புக் பயனாளரால் அக்டோபர் 9 2020 இல் பகிரப்பட்டுள்ளது. தந்தை ஒருவர் மகனைக் கல்விக்காகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டுடன் காணப்பட்டது.


இதே புகைப்படம் அக்டோபர் 4 2020 இல் வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. மேலும் அந்த சம்பவம் ஏமன் பகுதியில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கபர் ஏஜென்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சம்பவம் குறித்த முழுமையான செய்தி வெளியிடப்படவில்லை.



எனவே ஏமனில் எடுத்த பழைய புகைப்படம் தற்போது ஆசிப் சம்பவத்தில் தவறாக வைரலாக்கப்பட்டு வருகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News