இளைஞர்களை ஏமாற்றப் போலியாக வலம்வரும் வேலை அறிவிப்பு அறிக்கை!
By : Janani
சமீபத்தில் வாட்ஸ்ஆப்பில் ஒரு கடிதம் போன்று 'தேசிய ஊரக இளைஞர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்' குறித்த செய்தி பரப்பப்படுகிறது. அதில் இதற்குப் பதிவு செய்பவர்கள் பதிவு கட்டணமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த திட்டம் கல்வி அமைச்சகத்தால் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.
இந்த கடிதமானது கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு வேலைப்வாய்பினை வழங்குவது குறித்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் இதனுடன் 1000 ரூபாய் கொண்ட வங்கி DD யை இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இதுகுறித்து சரிபார்த்த போது இந்த அறிக்கை போலி என்றும் மற்றும் "தேசிய ஊரக இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்" என்ற பெயரில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராமப்புற மேலாண்மை அமைச்சகத்தின் வலைத்தளத்தில் சரிபார்த்த போது, இதுபோன்று ஒரு செய்தி அங்குக் கிடைக்கவில்லை.
அரசாங்கம் DDU GKY திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005 கீழும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகிறது. இதுதவிர அந்த கடிதத்தில் பல எழுத்துப் பிழைகளும் மற்றும் இலக்கணப் பிழைகளும் அதிகம் காணப்பட்டது. மேலும் அரசாங்கத்திடம் இருந்து வரும் அதிகாரப்பூர்வ கடிதங்களில் இதுபோன்று பிழைகள் காணப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இது போன்று தேசிய ஊரக இளைஞர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் போன்று 1000 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தச் சொல்லி எந்த ஒரு அறிக்கையையும் கல்வி அமைச்சகம் வெளியிடவில்லை. தற்போது வாட்ஸ் ஆப்பில் வரும் இந்த செய்தி தவறானது ஆகும்.