அமேசான் இலவச மொபைல் போன் உண்மையா? வலம் வரும் லிங்க்!
By : Janani
சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் கூறப்படும் செய்திகளின் உண்மையை ஆராயாமல் பகிர்ந்து வருகின்றோம். அதில் பல ஏமாற்று வேலைகளும் நடைபெறுகின்றது. சமூக ஊடகங்களில் ஒரு லின்க் பரபரப்பாகப் பரப்பப்பட்டு வருகின்றது. அதில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் தனது 30 வது ஆண்டு ஆண்டுவிழாவில் தங்களில் 100 பயனாளர்களுக்கு இலவசமாக மொபைல் போன் வழங்குவதாகக் கூறப்படும் செய்தி வைரலாகி வருகின்றது.
சமூக ஊடக பயனாளர்கள் கொடுக்கப்பட்ட லின்கை தேர்வு செய்யும்போது அமேசான் வலைத்தளம் பக்கம் போன்று ஒன்று தோன்றுகிறது. அதில் அமேசான் ஹவாய் 40 pro 5G மொபைல் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 வெற்றியாளர்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தது. இதனை ஆர்வமாகப் பல ஊடக பயனாளர்கள் பகிர்ந்து வருகின்றது.
இந்த லின்க் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது இதுபோன்று ஒரு அறிவிப்பை அமேசான் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்த லின்கை தேர்வு செய்த போது அது கொண்டு அமேசான் வலைத்தளம் பக்கம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பக்கம் போன்று தோன்றவில்லை. அதில் கொடுக்கப்பட்டுள்ள மெனு ஆப்சனும் வேலை செய்யவில்லை.
இதுதவிர அதில் 100 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று குறிப்பிட்டிருந்தது, ஒவ்வொரு நபரும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் போது இரண்டாவது முறையும் அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றனர். மூன்றாவதாக இது பயனர்கள் தங்கள் முகவரியை உள்ளிட்ட செய்து இந்த பரிசை பெற வாட்ஸ்ஆப் குரூப்பில் பகிர அறிவுறுத்துகிறது.
இது கவனிக்கப்பட்ட மோசடியும் கூட. இந்த மோசடியில் பயனர்களின் எலக்ட்ரானிக் சாதனங்களை ஹக் செய்து அதிலிருக்கும் செய்தியைக் கைப்பற்ற முடியும். இது பயனர்களின் தகவல்களில் திருடுவதில் செயல்படுத்தும் பொதுவான முறையாகும்.
இதுகுறித்து அமேசான் வாடிக்கையாளர் சேவையை அணுகியபோது, நிறுவனத்திடமிருந்து இதுபோன்று எந்தவித சலுகையும் வழங்குவதாக அறிவிக்கவில்லை மற்றும் அந்த லின்க் போலியானது என்பதை தெரிவித்துள்ளது. மக்களை எச்சரித்து இதுபோன்று வரும் போலியான லின்க் குறித்து உறுதிப்படுத்துமாறும் எச்சரித்துள்ளனர்.
எனவே தற்போது வைரலாக பரப்பப்படும் அமேசான் குறித்த லின்க் போலியானது ஆகும்.மக்கள் இதுபோன்ற லின்கை உடனடியாக நம்பவேண்டாம் அது குறித்து உறுதி செய்து பயன்படுத்துமாறு கேட்டுக்கொல்லப்படுகின்றது.