மாணவர்கள் மாடியில் இருந்து விழும் வைரல் வீடியோ -இந்தியாவில் நடந்ததா?
By : Janani
தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு குழப்பமான வீடியோவாக, ஒரு நெரிசல் மிகுந்த கட்டிடத்தில் மெட்டல் ரெய்லிங் கீழே விழுந்தவுடன் சில இளைஞர்கள் அங்கிருந்து கீழே விழுவது போல் பதைபதைக்கும் வீடியோ பரவலாக வைரலாகி வருகின்றது. மேலும் இந்த சம்பவமானது அசாமில் குவாஹாத்தி பகுதியில் நடந்தது என்று கூறப்பட்டு வருகின்றது.
பேஸ்புக் பயனாளர் ஒரு இந்த வீடியோவை பகிர்ந்து, "குவாஹாத்தியில் 4 வது மாடியில் இருந்து விழுந்து 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நெரிசல் மிகுந்த பகுதியில் கவனமாக இருங்கள்! " என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வீடியோ குறித்து ஆராய்ந்த இந்தியா டுடே, இந்த சம்பவமானது பொலிவியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த சம்பவம் குவாஹாத்தியில் நடந்துள்ளது என்று நம்பி பல பேஸ்புக் பயனாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்த போது, பொலிவியாவில் எல் அல்டோ பல்கலைக்கழகத்தில் மார்ச் 2 2021 இல் நடந்துள்ளது. இதே வீடியோவை "டைம்ஸ் ஆப் இந்தியா" வெளியிட்ட செய்தி அறிக்கையிலும் காணப்பட்டது.
நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தி அறிக்கையின் படி, மாணவர்கள் விரைந்து ஒரு ஹால் குள் நுழைய முயன்றபோது பல்கலைக்கழகத்தின் நிதித்துறை அறிவியல் துறை கட்டிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு செய்தி அறிக்கையில் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்ததில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த குவாஹாத்தியில் நடந்திருந்தால் அனைத்து செய்தி தளங்களும் இந்த சம்பவத்தைப் பதிவு செய்திருக்கும். ஆனால் குவாஹாத்தியில் இந்த சம்பவம் போன்று நடந்தாக கண்டறியப்படவில்லை.
எனவே மாணவர்கள் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தது குவாஹாத்தியில் நடந்தது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உண்மையில் அது பொலிவியாவில் நடந்துள்ளது.