ராகுல் காந்திக்கு கூடிய கூட்டமா? வலம் வரும் தவறான புகைப்படம்.!
By : Janani
தற்போது ஒரே கட்டமாக ஏப்ரல் 6 இல் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் மும்முரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதே நிலையில் இரண்டு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் ஒரு வேனை சுற்றி பெரியளவிலான கூட்டம் காணப்படுகின்றது. மேலும் அது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்பதற்காகத் தமிழ்நாடு மக்களின் வரவேற்பு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகைப்படம் தவறான கூற்றுடன் தவறாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இது உண்மையில் மார்ச் 19 2021 இல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியான திமுக தலைவர் M.K ஸ்டாலின் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் குறித்த ட்விட்டும் திமுக அதிகார பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
மார்ச் 20 இல் ஒரு செய்தி அறிக்கையில் வெளியிட்ட புகைப்படத்தில் திருப்பூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தை மேற்கொண்டார். "தமிழ்நாட்டில் வரவிற்கும் தேர்தலை முன்னிட்டு கட்சி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் திருப்பூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் மக்களின் ஆதரவைக் கோரினார்," என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் மார்ச் 19 ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் மார்ச் 19 மற்றும் 20 இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசாமிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
எனவே தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தில் தமிழ்நாட்டில் ராகுல் காந்தியை வரவேற்க மக்களின் கூட்டம் கூறப்பட்டு வருவது தவறானது. இது உண்மையில் ராகுல் காந்தியை வரவேற்பதற்கானப் புகைப்படமில்லை.