வேலைவாய்ப்பின்மையில் அசாம் உச்சத்தில் உள்ளது என்ற ராகுல் காந்தியின் கூற்று சரியா?
By : Janani
தற்போது அசாமில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மார்ச் 31 இல் தேர்தல் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது நாடு முழுவதும் அதிகளவு வேலைவாய்ப்பின்மை அசாமில் அதிகமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது இது பொய்யான குற்றச்சாட்டு என்று தெரியவந்தது. ஜூன் 2018-ஜூன் 2019 மத்திய புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்கத் துறை சமீபத்தில் தொழிலாளர் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. PLFS 2018-19 யின் படி லட்சதீவில் அதிகளவு வேலைவாய்ப்பு இன்மையாக 31.6 சதவீதமும் மற்றும் நாகாலாந்தில் 17.5 சதவீதமும் மற்றும் அசாமில் வெறும் 6.7 சதவீதமும் பதிவாகியிருந்தது.
மேலும் நகர்ப்புறங்களில் வேலையின்மை குறித்து மத்திய புள்ளிவிவர அலுவலகம் காலாண்டில் PLFS அறிக்கையை வெளியிடுகிறது. ஏப்ரல் -ஜூன் 2020 யின் அறிக்கையின் படி, அசாமில் வேலையின்மை சதவீதம் 15.6 ஆகவும் மற்றும் அதிகமாக மகாராஷ்டிராவில் 35.6 சதவீதமாகவும் மற்றும் ஜார்கண்டில் 32 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
மேலும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு எதிராக மத்திய பொருளாதார கண்காணிக்கும் மையம்(CMIE) மாநிலத்தின் தற்போது வேலையின்மை குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில் அசாமில் மார்ச் 2021 யின் அறிக்கையின் படி, மிகவும் குறைவாக 1.1 சதவீதம் வேலையின்மை பதிவாகியுள்ளது. ஹரியானாவில் அதிகளவாக 28.1 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அசாமில் வேலைவாய்ப்பின்மை குறைவாகவே இருந்தது.
2020 இல் மாநிலத்தில் வேலைவாய்ப்பு இன்மை சதவீதம் அக்டோபரில் 3 சதவீதமாகவும் மற்றும் டிசம்பரில் 7.6 சதவீதமாக மற்றும் பிப்ரவரியில் 1.65 சதவீதமாகவும் இருந்தது. அசாமில் ஊரடங்குக்குப் பிறகு வேலையின்மை சதவீதம் கூடத்தொடங்கியது. 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்கு காலங்களில் வேலையின்மை சதவீதம் 9.6 முதல் 11.1 சதவீதமாக அதிகரித்தது. அசாமில் வேலையின்மை சதவீதம் குறைவாகவே இருக்கின்றது என்று CMIE தெரிவிக்கின்றது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது மறுபடியும் மக்கள் மீண்டும் வேலையில் ஈடுபடத் தொடங்கினர் மற்றும் மீண்டும் வேலைக்கு பணியமர்த்தப்பட்டனர், இதனால் மீண்டும் வேலைவாய்ப்பின்மை சதவீதம் கூட வாய்ப்புள்ளது என்று வடகிழக்கு சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் Dr வால்டர் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
எனவே அசாமில் மற்ற மாநிலங்களை விட நாட்டில் அதிகமான வேலைவாய்ப்பின்மை நிலைமை இருக்கின்றது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுப் போலியானது ஆகும்.