Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் பிரதமர் குறித்து மார்பிங் செய்யப்பட்ட வீடீயோவை பகிர்ந்து சிக்கிக்கொண்ட காங்கிரஸ்!

மீண்டும் பிரதமர் குறித்து மார்பிங் செய்யப்பட்ட வீடீயோவை பகிர்ந்து சிக்கிக்கொண்ட காங்கிரஸ்!

JananiBy : Janani

  |  3 April 2021 10:57 AM GMT

வழக்கம் போல மீண்டும் பிரதமர் மற்றும் பா.ஜ.க குறித்து தவறான செய்தியைப் பரப்பி காங்கிரஸ் பிடிபட்டுள்ளது. இம்முறை அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி ஆளில்லாத மைதானத்தில் கையசைப்பதாகக் கூறி மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் மற்றும் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவருமான ஸ்ரீநிவாஸ் BV டிவிட்டர் பகிர்ந்து வந்தனர்.


வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீநிவாஸ் BV டிவிட்டர் பக்கத்தில், ஒரு மங்கலான வீடீயோவை பகிர்ந்து, பார்த்தீர்களா பிரதமர் தூரத்தில் இருக்கும் மரங்களுக்கு ஆளில்லாத மைதானத்தில் கையசைத்து வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் ஆடியோவும் தடை செய்யப்பட்டுள்ளது. சில மணி நேரத்திற்குப் பிறகு இதே வீடியோ காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது.

அந்த மங்கலான வீடியோவில் ஆளில்லாத மக்களுக்குப் பிரதமர் கையசைப்பது போல் தென்பட்டாலும், உண்மை வேறு. அந்த மைதானத்தில் பெரியளவில் கூட்டம் திரண்டிருந்தது. அது வீடியோ மங்கலாகப்பட்டதால் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தின் சத்தத்தை ஆடியோவை கட் செய்தது மூலம் மறைக்கப்பட்டது.


காங்கிரஸ் தலைவரும் மற்றும் கட்சி உறுப்பினரும் இந்த வீடீயோவை பகிர்ந்தவுடன், சமூக ஊடக பயனாளர்கள் உண்மை வீடீயோவை ஆடியோவுடன் பகிர்ந்தனர். இவர்களின் போலித் தனம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் மற்றும் ஸ்ரீநிவாஸ் BV அவர்களின் ட்விட்டை நீக்கி விட்டனர்.

இருப்பினும் நேற்றே உண்மையான வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டது, மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜெயநகருக்கு சென்றடைந்தார். பெரிய மைதானத்தில் பிரதமர் ஒரு ஹெலிஹாப்டரில் இறங்குவதையும் மற்றும் அவரை சுற்றி தூரத்தில் மக்கள் கூட்டம் இருப்பதையும் காணமுடிந்தது. இதனால் அவர்கள் இந்த உண்மை வீடீயோவை சுலபமாக மார்பிங் செய்துவிட்டனர்.



உண்மையில் பிரதமர் அந்த மைதானத்தை வந்தடையும் போது பெரியளவில் கூச்சலைப் பெற்றார். காங்கிரஸ் செய்து வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News