தனது காரை பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாகக் குற்றம்சாட்டும் ராகேஷ் டிக்கைட் - வீடியோவில் வெளிப்பட்ட உண்மை!
By : Janani
விவசாய தலைவர் ராஜேஷ் டிக்கைட் தனது காரை பா.ஜ.க தொண்டர்கள் சூறையாடியதாகக் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து விவசாய அமைப்பான BKU ஒரு வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்து, ராஜஸ்தான் அல்வார் கிராமத்தில் வைத்து இவரை பா.ஜ.க குண்டர்கள் கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டினர். இது ஜனநாயக கொலை என்றும் அவர்கள் குற்றம் கூறினர்.
ஆனால் உண்மையில் ஆச்சரியப்படும் விதமாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தாங்களே காரை சேதம் செய்துள்ளனர். இது வீடியோவில் பதிவாகியுள்ளது. இவர்களே காரை சேதம் செய்தது அவர்களே பதிவு செய்து பதிவிட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
https://twitter.com/RakeshTikaitBKU/status/1377942417026940928
அந்த வீடியோவில் ஒரு மனிதனின் ஆக்கோரசமைடைந்த குரலைக் காண முடிந்தது. மேலும் கேமரா காரின் விண்ட்ஷியில்டு நோக்கி இருந்தது, சிலர் காரின் வலது புறத்தில் இருந்து காரை அடித்து ராகேஷ் டிக்கைட் அவர்களை பா.ஜ.க தலைவர்கள் தாக்கினர் என்று கூறினர். அந்த நபர் கூச்சலிட்டவுடன், கார் மீது குண்டு வீசப்பட்டது, மேலும் காரின் கண்ணாடியும் தாக்கப்பட்டது.
இதன் பிறகு அந்த நபர் அந்த காரின் சேதமடைந்த பகுதியைச் சுட்டிக்காட்டி, உழவர்கள் எதிர்ப்பு தலைவர்களால் ராகேஷ் டிக்கைட் அவரது கார் தாக்கப்பட்டுள்ளது மற்றும் அவர் மீது மையும் தெளிக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார்.
ராகேஷ் டிக்கைட் மற்றும் பிற ஆர்பாட்டக்காரர்களும் கார் மீது துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினாலும் அதற்கான அடையலாம் எதுவும் காணப்படவில்லை. துப்பாக்கி குண்டுகள் பொதுவாகச் சிறிய ஓட்டையையே ஏற்படுத்தும். ஆனால் அந்த வீடியோவில் காணும்போது ஒரு பொருளை வைத்து அடித்ததாகத் தெரிகின்றது. இது உண்மை ஒரு கட்டையால் அல்லது கல் வீசப்பட்டதால் ஏற்பட்டதாக என்பதைக் கண்டறிய வேண்டும்.
இதுபோன்று விவசாய தலைவர்கள் தங்கள் காரை சேதம் செய்து குற்றவாளிகளை வடிவமைப்பது முதன் முறை அல்ல. ஜனவரி மாதத்தில் பஞ்சாப் விவசாய அமைப்பின் தலைவர் ரூல்டு சிங் மான்ச தனது காரை ஹாக்கி ஸ்டிக்கால் அடித்து நொறுக்கி பின்னர் போராட்டம் செய்வதில் இருந்து தடுக்க டெல்லி காவல்துறை செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
எனவே தற்போது ராகேஷ் டிக்கைட் அவரது காரை பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாகக் கூறிவரும் குற்றச்சாட்டுகள் போலியானது ஆகும். இது அவர்களே செய்து பின்னர் பா.ஜ.க தொண்டர்கள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.