தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த வைரல் செய்தி உண்மையா?
By : Janani
தற்போது நாட்டில் மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவ தொடங்கியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றதது. அதே போன்று ஒரு வைரல் செய்தியாக வாட்ஸ்ஆப்பில், தமிழ் நாட்டில் ஏப்ரல் 9 வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அந்த வைரல் செய்தியில் கோவில்கள், கடற்கரைகள் போன்ற பொது இடங்களில் 144 சட்டம் பிறப்பிப்பு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை போன்றவற்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த புதிய கட்டுப்பாடானது ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 30 வரை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது என்று கூறப்பட்டிருந்தது.
இதுபோன்ற வதந்திகளை நிராகரித்து, மக்களை இதுபோன்ற வதந்திகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதார செயலாளர் J ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். "இதுபோன்ற ஆலோசனைகள் எதுவும் வெளியிடப்படவில்லை.மக்கள் அதிகாரப்பூர்வ அறிக்கை இல்லாமல் வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம்," என்று ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
மேலும் அவர் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்றவற்றிற்கு அத்தியாவசிய மற்ற செயல்களுக்குக் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைக்கக்கூடும் என்று வலியுறுத்தினார். "நாம் தேவையில்லாத கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். இதை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,672 மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. சென்னையில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,335 ஆகவும் மொத்த வழக்குகள் 2,55,074 ஆகப் பதிவாகி உள்ளது. மேலும் தற்போது கட்டுப்பாடுகள் குறித்து வைரலாகி வரும் செய்தி தவறாகப் பரப்பப்படுவது ஆகும்.