தேர்வில் மாணவர்களை கடிமான கேள்விக்கு முதலில் பதிலளிக்க பிரதமர் அறிவுறுத்தினாரா?
By : Janani
ஏப்ரல் 7 பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் இருக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் 'பரிக்ஷ பெ சர்ச்சா' என்னும் நிகழ்ச்சியில் உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் 90 நிமிடங்கள் தனது அனுபவங்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் வழிமுறைகளை வழங்கினார். வெளிநாட்டில் இருக்கும் மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் சில பதிவுகள் பரவ தொடங்கின, அதில் பிரதமர் மோடி மாணவர்களைத் தேர்வு சமயங்களில் கடினமான கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கக் கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மீதான இந்த குற்றச்சாட்டானது, ஆசிரியர்களுக்கு மாணவர்களைத் தேர்வில் முதலில் சுலபமான கேள்விக்குப் பதிலளிக்க வலியுறுத்தியதை மாறாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதன் பிறகு பல நெட்டிசென்கள், எதிர்க் கட்சிகளும் இது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டினர்.
காங்கிரஸ் தலைவர் பவான் க்ஹெரா ஆஜ் தக் ட்விட்டை மேற்கோள்காட்டிச் செய்திருந்த ட்விட் தற்போது அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தவறான அறிக்கை அந்த வலைத்தளத்திலிருந்தும் அளிக்கப்பட்டது.
கடினமான பாடங்கள் குறித்துப் பேசும்போது, மாணவர்கள் அனைத்து பாடங்களை கற்கும் போது அதே உற்சாகத்துடன் படிக்கவேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். அனைத்து பாடங்களுக்கும் சமமாக நேரம் ஒதுக்கும் படியும் கேட்டுக்கொண்டார். பிரதமர் தேர்வின் பொது சுலபமான கேள்விக்கு முதலில் பதிலளிக்கவும் மற்றும் சுலபமான பாடங்களை முதலில் கற்பிக்கக் கற்றுக்கொடுத்தாலும், பாடங்களை கற்கும் போது அவரது கருத்துக்கள் மாறுபட்டுள்ளன.
முதலில் படிக்கத் தொடங்கும் முன்பு கடினமான பாடங்களை கற்கவேண்டும், இது கற்பவர்களுக்குச் சுலபமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் குஜராத்தில் முதலமைச்சராக இருக்கும் போதிலும் மற்றும் தற்போது இந்தியப் பிரதமராக உள்ளபோதிலும் இருக்கும் அனுபவங்களை அவர் பகிர்ந்தார். காலையில் கடினமான பாடங்களை கற்குமாறு கேட்டுக்கொண்டார். அவற்றைக் கடந்து செல்லவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கலந்துரையாடலின் போது பிரதமர் கடினமான பாடங்களை முதலில் கற்பது குறித்துப் பேசினார், அவர் தேர்வில் கடினமான கேள்விக்குப் பதிலளிப்பது குறித்துப் பேசவில்லை. கடினமான பாடங்களை முதலில் கற்பது நம்பிக்கையை அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் பிரதமருடைய இந்த கருத்து பாடங்களில் கற்பதில் மட்டுமே, தேர்வில் எழுதுவது குறித்து அல்ல.
எனவே பிரதமர் தேர்வில் கடினமான கேள்விக்கு முதலில் பதிலளிக்கக் கூறவில்லை, அவர் கற்பிக்கும் நேரம் குறித்தே பேசினார். படிக்கத் தொடங்கும் முன் புதிய உற்சாகத்துடன் முதலில் கடினமான பாடங்களை கற்றால் பின்னர் எளிதான பாடங்களைப் படிக்க இன்னும் எளிதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். எனவே தற்போது கூறப்படும் குற்றச்சாட்டுத் தவறானது ஆகும்.
source: https://www.opindia.com/2021/04/fact-check-did-pm-modi-ask-to-attempt-difficult-questions-first-in-exams/