இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டனரா? செய்தி உண்மையா?
By : Janani
தற்போது சிரோமணி அகாலி தால் தலைவர் மஜிந்தர் சிங் சிர்சா தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஒரு மனிதரை சில பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் இரக்கமின்றி துன்புறுத்தி சித்திரவதை செய்வதைக் காண முடிந்தது. அந்த நபர் உயிரற்று படுத்திருந்த போதிலும் அவரை அடிப்பதை அவர்கள் நிறுத்தவில்லை. மேலும் நடந்த சம்பவத்தை அனைத்தையும் ஒருவர் பதிவு செய்து கொண்டிருந்தார்.
மஜிந்தர் சிங் சிர்சா தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவு செய்து, பாதிக்கப்பட்ட நபர் இந்திய இராணுவ வீரர் என்றும் அவரை பாகிஸ்தானிய வீரர்கள் இரக்கமின்றி தாக்குகின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் இதே வீடியோ அதே குற்றச்சாட்டுகளுடன் டிவிட்டர் பக்கத்திலும் SAD தலைவர் பகிர்ந்தார்.
மேலும் அந்த வீடியோவை பகிர்ந்த போது, சில பாகிஸ்தான் வீரர்கள் இந்திய இராணுவவீரர் மீது கொடுமைகள் செய்வதைக் காணமுடிந்தது என்று சிர்சா தெரிவித்தார். மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இதுபோன்று பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மனித உரிமை மீறலைத் தாண்டுவது குறித்து உலகளாவிய மேடையில் கேள்வி எழுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் பாகிஸ்தானில் உள்ள இந்திய வீரர்களை மீண்டும் இந்தியாவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டுவர அவசர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், SAD தலைவரின் குற்றச்சாட்டுகள் ஓரளவு மட்டுமே உண்மை. அவர் பகிர்ந்தது உண்மை சம்பவத்தின் வீடியோ என்றாலும், அதில் தாக்குதல் நடத்துபவர்கள் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்றாலும் அதில் தாக்குதலுக்கு உள்ளாவது இந்திய இராணுவ வீரர்கள் இல்லை. அதில் பாதிக்கப்பட்டவர் உண்மையில் பலோச்சை சேர்ந்தவர்.
மேலும் இந்த வீடியோ ஏப்ரல் 2 2021 இல் நியூஸ் நேஷன் வெளியிட்டது. இந்த சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது, பாகிஸ்தான் வீரர்கள் பலோசில் வைத்து ஒரு நபரை பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும் அந்த பாகிஸ்தான் வீரர்கள் உயிரற்ற அந்த நபரை கருப்புலிகளால் தாக்கினர். அவர்கள் தொடர்ந்து அந்த பாதிக்கப்பட்ட நபரை முகத்தில் எத்துவதைக் காணமுடியாதது.
எனவே SAD தலைவர் பகிர்ந்த வீடியோ உண்மையானதாக இருந்தாலும் அதில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானது ஆகும். இது ஆறு மாதத்திற்கு முந்தைய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மீண்டும் வலம் வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட நபர் பலோசை சேர்ந்தவர் மற்றும் இந்திய இராணுவ வீரர் இல்லை.
source: https://www.opindia.com/2021/04/truth-behind-video-of-pakistan-army-shared-by-manjinder-singh-sirsa/