Kathir News
Begin typing your search above and press return to search.

மத வெறுப்பை விதைக்க முயலும் இந்தியா டுடே ஊடகம்! மத்திய அரசின் பெயரில் வெளியான போலி செய்தி!

மத வெறுப்பை விதைக்க முயலும் இந்தியா டுடே ஊடகம்! மத்திய அரசின் பெயரில் வெளியான போலி செய்தி!

MuruganandhamBy : Muruganandham

  |  11 April 2021 3:18 AM GMT

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த வருடம் கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா இந்தியாவில் அலகாபாத், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நகரங்களில் நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஹரித்வாரில் மிகவும் விசேஷமாக விழா நடக்கும். உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஹரித்வாரில் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் இந்த விழா நடைபெறுகிறது.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்த விழாவை ஏப்ரல் 1 முதல் 30 வரை நடத்த மட்டும் உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா இல்லை என்னும் சான்றிதழ் உள்ளோர் மட்டுமே நகரில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த சூழலில் "கும்ப மேளா நிகழ்ச்சி மூலம் கொரோனா மிக அதிக அளவில் பரவுகிறது " என இந்தியா டுடே போலி செய்தி வெளியிட்டு மத்திய அரசு சொன்னதாக கூறுகிறது.



கிட்டத்தட்ட அனைத்து "பிரபல" ஊடகங்களும் இந்தியா டுடே செய்தியை காப்பியடித்து அதே செய்தியை வெளியிட்டுள்ளன. இந்த செய்தி தவறானது, போலியானது என மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது. பொய் செய்தி வெளியிட்டாவது அரசிற்கும் ஆளும் கட்சிக்கும் எதிராக மனோபாவத்தை மக்கள் மத்தியில் விதைத்து, அதன் மூலம் ஏதோவொரு பிரச்சினையை ஏற்படுத்தி, ஆளும் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இதையேதான் தமிழகத்தில் செய்கின்றனர். தொடர்ந்து உதயநிதி போன்றவர்கள் மோடியை எதிர்த்து பேசுவதற்கு, காரணம் இல்லாமல் இல்லை. அது தான் வாக்கை பெற்று தரும் என்று உறுதியாக நம்புகின்றனர். அதன் விளைவே இது போன்ற செய்திகள் எல்லாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News