தடுப்பூசி வழங்குவதில் பா.ஜ.க ஆட்சிபுரியும் மாநிலங்களுக்கு மத்திய அரசு பாகுபாடு காண்பிக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மையா?
By : Janani
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பில் அதிகம் பாதித்துள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இது ஏப்ரல் 9 2021 யின் படி ஒரே நாளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 58,993 ஆக உள்ளது.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப், கொரோனா தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காண்பிப்பதாகத் தெரிவித்துள்ளார். தொற்றின் பாதிப்பில் அதிகமாக மாநிலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசியில் பற்றாக்குறை ஏற்பட்டாலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவில் தடுப்பூசியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
டோப்பின் கூற்றுப்படி, "மகாராஷ்டிரா வெறும் 7.5 லட்சம் தடுப்பூசிகளையே பெற்றுள்ளது. மகாராஷ்டிராவை விட அதிகமாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா அதிகம் பெற்றுள்ளது," என்று குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து பல சமூக ஊடகங்களும், மத்திய அரசாங்கம் பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட மிகக்குறைவாகத் தடுப்பூசி வழங்குவதாகக் குற்றம் சாட்டத் தொடங்கியது. அது வெளியிட்டிருந்த இடுக்கில், "பா.ஜ.க ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசத்துக்கு 48 லட்சமும், மத்தியப் பிரதேசத்துக்கு 40 லட்சமும், குஜராத்துக்கு 30 லட்சமும் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ஆனால் மகாராஷ்டிராவுக்கு வெறும் 7.50 லட்சத்தையே வழங்கியுள்ளது. இது வரி, GST மற்றும் PM கேர்ஸ்கு அதிக பங்களிக்கிறது," என்று குற்றம்சாட்டித் தெரிவித்ததது.
இதனைத் தொடர்ந்து அரசின் உண்மை கண்டறியும் குழுவான PIB ஏப்ரல் 8 2021 வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 16 2021 இல் தொடங்கப்பட்ட தடுப்பூசி இயக்கத்திலிருந்து மகாராஷ்டிரா 89,49,660 தடுப்பூசியைப் பெற்றுள்ளது. இது 9.92 சதவீத தடுப்பூசியைப் பெற்றுள்ளது இது ராஜஸ்தான் மாநிலத்தை விட மிக அதிகமாகும்.
ராஜஸ்தான் 9.19 சதவீதத்தைப் பெற்றுள்ளது. இரண்டு மாநிலங்களும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் இல்லை. மகாராஷ்டிரா சிவ சேனா ஆட்சியின் கீழ் மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இயங்குகிறது. கொரோனா தடுப்பூசியில் அதிகம் பெற்றது மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது குஜராத்தாகும்," என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி ஜபின் 60 சதவீதத்தை நிறைவு செய்த முதல் எட்டு மாநிலங்களின் பெயர்களை PIB. இதில் முதல் இரண்டு இடங்களில் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.
இந்த அறிக்கையில் இருந்து பா.ஜ.க ஆட்சிக்குள் மாநிலங்களே அதிக தடுப்பூசியைப் பெற்றதில் இடம்பெற்றுள்ளது. மேலும் மத்திய சுகாதார அமைச்சகம் ஏப்ரல் 9 வெளியிட்ட அறிக்கையிலும் இதுவரை தடுப்பூசி பெற்றுள்ள எண்ணிக்கையில் மகாராஷ்டிரா 93 லட்சத்தைப் பெற்றுள்ளது மற்றும் இதுவே அதிக எண்ணிக்கையும் ஆகும் என்று என்று தெரிவித்திருந்தது.
source: https://thelogicalindian.com/fact-check/coronavirus-vaccine-maharashtra-27805