Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தான் முதலமைச்சர் 100 கோடி ரூபாயைத் தர்காவுக்கு ஒதுக்கினாரா? உண்மை பின்னணி என்ன?

ராஜஸ்தான் முதலமைச்சர் 100 கோடி ரூபாயைத் தர்காவுக்கு ஒதுக்கினாரா? உண்மை பின்னணி என்ன?
X

JananiBy : Janani

  |  22 March 2021 5:10 AM GMT

சமூக ஊடகத்தில் ஒரு செய்தித்தாள் விளம்பரம் வைரலாகி வருகின்றது. அதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹலோட் அவர்கள் மதம் சார்ந்த வளர்ச்சிக்கு 100 கோடி வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பணம் ஒரு தர்கா அமைக்கச் செலவிடப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


அந்த குற்றச்சாட்டில்,"இந்துக்கள் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக வீடுவீடாக சென்று நன்கொடைகளைப் பெறுகின்றனர். ஆனால் ராஜஸ்தான் முதலமைச்சர் தர்காவுக்கு 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பின்னர் அந்த தர்காவில் இந்துக்களின் அழிவுக்காக பிரார்த்தனை செய்யப்படும்," என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் இதுகுறித்து ராஜஸ்தான் நிதி அறிக்கையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்றுநோயால் பாதிப்படைந்துள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தர்காவுக்கு 100 கோடி வழங்கியதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

பின்னர் எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், "100 கோடி ரூபாய் மதம் சார்ந்த சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது மற்றும் அந்த நிதியானது ஷெகாவதி சுற்றுலா மற்றும் கோதாவாட் சுற்றுலா பகுதியை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் ராஜஸ்தான் நிதி அறிக்கையில் 74 மற்றும் 75வது பக்கத்தைப் பார்த்தபோது, இந்து, ஜெயின், சீக்கியம் மற்றும் முஸ்லீம் மதம் சார்ந்த சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தர்காவிற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானது ஆகும். அந்த பணமானது மத சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News