கொரோனா நிவாரண திட்டத்தின் கீழ் 10,000 பேருக்கு WHO பணதொகை வழங்குகிறதா - வைரல் செய்தி உண்மையா?
By : Janani
கொரோனா தொற்று நாட்டில் பரவ தொடங்கியதைத் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. நாட்டில் மக்கள் தொற்று நோயால் அவதிப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், பரப்பப்படும் இதுபோன்ற தவறான செய்திகளால் மக்களிடையே பதற்றத்தை உண்டாக்குகின்றது.
தற்போது அது போன்ற ஒரு வைரல் செய்தியாக வாட்ஸ்ஆப்பில், கொரோனா தொற்று நிவாரண திட்டத்தின் கீழ் 10,000 பேருக்கு உலக சுகாதார மையத்திடம் இருந்து நிதி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
வாட்ஸ் ஆப்பில் வலம் வந்த அந்த வைரல் செய்தியில், "உலக சுகாதார மையத்திடம் இருந்து புதிய கொரோனா தடுப்பூசி நிதியின் கீழ் 50,000 முதல் 1,00,000 வரை பணம் பெற புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகளவில் பரவி வரும் இந்த தொற்று நோயின் நிவாரண திட்டத்தின் கீழ், தினசரி 10,000 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணம் வழங்கப்படும்," என்று அந்த வைரல் கூற்றில் தெரிவிக்கப்பட்டு ஒரு லிங் கீழே குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வைரல் செய்தியைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் உண்மை கண்டறியும் குழுவான PIB ஒரு ட்விட்டை வெளியிட்டுள்ளது. அதில், "உலக சுகாதார மையத்திடம் இருந்து கொரோனா நிவாரண திட்டத்தின் கீழ் 10,000 பேருக்கு ரொக்கம் வழங்குவதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இந்த செய்தி தவறாகப் பரப்பப்பட்டு வருகின்றது. கொரோனா தடுப்பூசி நிதியின் கீழ் எந்த பண விருதும் WHO வழங்கவில்லை," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தனது டிவிட்டில், இது போன்ற தவறான செய்தி பரப்புவதன் மூலம் தனிப்பட்ட நபர்களின் தகவலைத் திருடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்றும் எச்சரித்தது. விழிப்புடன் இருக்குமாறும், தெரியாத லிங்க்கை கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டது.
source: https://www.oneindia.com/fact-check/fake-10000-people-will-not-get-cash-award-from-who-under-covid-19-relief-plan-3262073.html