Kathir News
Begin typing your search above and press return to search.

குஜராத் கலவரம் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் பொய் - பின்னணி என்ன?

குஜராத் கலவரம் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் பொய் - பின்னணி என்ன?
X

ShivaBy : Shiva

  |  23 Dec 2021 12:30 AM GMT

பிப்ரவரி 27, 2002 அன்று அயோத்திக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த இந்துக்கள் மீது ஒரு இஸ்லாமிய பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தி அவர்கள் பயணம் செய்த ரயிலுக்கு தீ வைத்தது. இந்த சம்பவத்தில் அந்த ரயிலில் பயணம் செய்த 59 இந்து யாத்ரீகர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதன்பிறகு நடைபெற்ற கலவரத்தின் போது 9 மாத கருவுற்றிருந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை இந்துக்கள் பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொலை செய்து அவரது வயிற்றில் இருந்த சிசுவை கத்தியின் மூலம் கிழித்து எடுத்து தீயில் வீசியதாக பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

அதன் அடிப்படையில் பல்வேறு விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்த கலவரத்தில் 9 மாத கர்ப்பிணியான கௌசர் பானோவை இந்துக்கள் சிலர் கொலை செய்து அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசுவை தீயில் எறிந்ததாகவும் பின்னர் கௌசர் பானோவையும் தீயில் எறிந்ததாகவும் அவரது அண்ணி சாய்ரா பானோ கூறியதாக மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின. இன்னும் சில செய்தி நிறுவனங்கள் 9 மாத சிசு கத்தியால் வெட்டப்பட்டு பின்னர் தீயில் தூக்கி எறியப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டன. சில பதிப்புகளில் அந்த குழந்தை வாள்முனையில் குத்தி சுழற்றப்பட்டு பின்னர் நெருப்பில் வீசப்பட்டது இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்திகள் தற்போது கூட சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை கௌசர் பனோவின் உடற்கூறாய்வு அறிக்கை மூலம் அறிய முடிகிறது. 2010ஆம் ஆண்டு கௌசருக்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஜே.எஸ்.கனோரியா நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி உயிரிழந்த கௌசருக்கு பிரேத பரிசோதனை செய்யும் போது அவரது வயிற்றில் கரு இருந்ததாகவும் அந்த கருவின் எடை 2,500 கிராம் மற்றும் 45 செமீ நீளம் கொண்டதாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதேபோல் பிரேத பரிசோதனை முடிவில் ​​கௌசர் பானோ மூச்சுத்திணறல், பயம் மற்றும் அதிர்ச்சியால் இறந்தார் என்பதும், அவரது உடலில் வெளிப்புறம் மற்றும் உள்புறம் காயங்கள் இல்லை என்பதும் அவரது உடலில் வெட்டுக் காயங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கலவரம் நடைபெற்ற சமயத்தில் இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கௌசரின் மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அதைச் சுற்றியுள்ள பொய்கள் தற்போதும் பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source : Opindia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News