மத்திய அரசு 150 கோடி வேலைவாய்ப்பினை வழங்கியதாகத் தவறாக வைரலாகி வரும் புகைப்படம்!
By : Janani
சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வைரல் செய்தியாக ஆஜ் தக் செய்தி புல்லட்டின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. அதில் கொரோனா தொற்றின் ஊரடங்கு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 150 கோடி அரசு வேலையை வழங்கியுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இருப்பினும் அந்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற ஒரு அறிக்கையைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடவில்லை.
மேலும் இது குறித்து ஆஜ் தக் யூடூப் வலைத்தளத்தைப் பார்த்தபோது, ஏப்ரல் 8 2021 தேதியிட்டு "கொரோனா தொற்று நிலைமை குறித்து பிரதமர் மோடி நேரலை" என்று குறிப்பிடப்பட்டு உண்மையான புகைப்படம் தென்பட்டது. இருப்பினும் தற்போது வைரல் புகைப்படத்தில் அதே நேரம் வைத்து மார்பிங் செய்துள்ளனர்.
உண்மை மற்றும் வைரல் புகைப்படத்துக்கு இடையே சில ஒற்றுமைகளும் மற்றும் வேறுபாடுகளும் காணப்பட்டது. இருப்பினும் தற்போது வைரலாகி வரும் தெளிவாக மார்பிங் செய்யப்பட்டுள்ளது.
உண்மை செய்தி புகைப்படத்தின், ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொள்வோம் என்ற கூற்றை வைரல் புகைப்படத்தில் பிரதமர் கொரோனா தொற்று காலத்தில் 150 கோடி வேலைவாய்ப்பினை வழங்கியதாக மார்பிங் செய்யப்பட்டுள்ளது.
மேலும் உண்மை செய்தி அறிக்கையின் கீழே உள்ள கூற்றும் மாற்றப்பட்டது. அதில் மீண்டும் ஊரடங்குக்குச் சத்தியம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் மத்திய அரசாங்கம் 150 கோடி அரசாங்க வேலையை வழங்கியதாக எந்த செய்தி அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை.
எனவே ஆஜ் தக் செய்தி நிறுவனத்தின் ஸ்கிரீன் தவறாக மார்பிங் செய்யப்பட்டு போலி குற்றச்சாட்டுடன் பரப்பப்பட்டு வருகின்றது.
source: https://newsmeter.in/fact-check/centre-did-not-provide-150-crore-jobs-viral-screenshot-is-morphed-676865