இந்து அல்லாத பிற மத ஊழியர்கள் 18 பேர் பணி நீக்கம்.. திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

திருப்பதி, திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்கள் 18 பேர் பணியாற்றுவதாக கூறப்படும் நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. உலக புகழ்பெற்ற இந்தக் கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் , தலைவர் பி.ஆர் நாயுடு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்து அல்லாத பிற மத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் நாயுடு, திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை மாற்ற முடிவு செய்து இருக்கிறோம். ஆந்திர அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப் படுவார்கள் என்று கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் (TTD) அறக்கட்டளை வாரியம், நவம்பர் 18, 2024 அன்று நடத்திய கூட்டத்தில் , திருமலை ஸ்ரீ பாலாஜி கோயிலில் இருந்து இந்து அல்லாத ஊழியர்களை நீக்கி, அவர்களை ஆந்திரப் பிரதேச அரசுக் குழுவிற்கு மாற்ற முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது
Input & Image Courtesy:The Commune