மகாராஷ்டிராவில் 18-44 வயதினருக்குத் தடுப்பூசி போடுவதை நிறுத்த மத்திய சுகாதார அமைச்சர் பரிந்துரைத்தது உண்மையா?
By : Janani
மகாராஷ்டிராவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான ஆலோசனையை மத்திய சுகாதார அமைச்சர் Dr ஹர்ஷ வரதன் வழங்கியதாகச் செவ்வாய்க்கிழமை அன்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டொப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த ஆலோசனையை மத்திய சுகாதார அமைச்சர் வழங்கவில்லை என்பதை மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
"நான் தனிப்பட்ட முறையில் மத்திய சுகாதார அமைச்சருடன் உரையாற்றினேன். மத்திய அரசாங்கத்திடம் தற்போது தடுப்பூசிகள் இல்லை. எனவே வேறு வழியின்றி, 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மெதுவாகத் தடுப்பூசி செலுத்த உள்ளோம். நாங்கள் வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசி வாங்க முயன்றோம், ஆனால் அங்கும் இல்லை," என்று ராஜேஷ் டொப் தெரிவித்தார்.
மேலும் அறிக்கையின் படி, மகாராஷ்டிராவில் 45 வயதுக்கு மேற்பட்ட ஐந்து லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காகக் காத்திருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது டோஸ்க்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய அரசாங்கம் திங்கட்கிழமை கேட்டுக்கொண்டது, இருப்பினும் அது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி தாமதமாகச் செலுத்தவேண்டாம் என்று பரிந்துரைக்கவில்லை.
மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், தினசரி வழக்கு அதிகமாகவே பதிவு செய்து வருகின்றது. மே 1 இல் மூன்றாம் கட்ட தடுப்பூசி இயக்கம் தொடங்கிய நிலையில், மாநிலங்கள் நேரடியாகத் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து தடுப்பூசிகளைப் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சுகாதார அமைச்சர் மாநிலங்களில் அடுத்த ஆறு மாதத்திற்குள் தடுப்பூசிகளைச் செலுத்த, தினசரி இரண்டு கோடி தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் ஸ்புட்னிக் V குறித்து ரஷ்ய நேரடி முதலீடு ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் அரசாங்கத்திற்கும் இன்னும் கிடைக்கவில்லை.
source: https://www.hindustantimes.com/india-news/health-minister-didn-t-suggest-centre-on-maharashtra-s-plan-to-halt-vaccination-for-18-44-age-group-101620797582825.html