Kathir News
Begin typing your search above and press return to search.

ராகுல் காந்தி போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டாரா? என்ன நடந்தது 2001ல்?

ராகுல் காந்தி போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டாரா? என்ன நடந்தது 2001ல்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 April 2023 4:13 AM GMT

ராகுல்காந்தி கடந்த 2001 ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்திருந்த காரணத்தால் அமெரிக்காவின் பாஸ்டன் விமான நிலையத்தில் பிடிப்பட்டதாகவும், இந்திய அரசாங்கத்தின் தலையீடு காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறி பத்திரிக்கை செய்தி பரவி வருகிறது.


செப்டம்பர் 30, 2001 அன்று வெளிவந்த The Boston Globe இதழின் 13 ஆம் பக்கத்தில் வைரலாகும் செய்தி அன்றைய இதழில் இடம்பெற்றிருக்கவில்லை.

தொடர்ந்து வைரலாகும் பத்திரிக்கை செய்தி குறித்து தேடுகையில், இத்தேடல் fodey.com எனும் இணையத்தளத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது. இந்த இணையத்தளத்தில் நாம் விருப்பப்பட்ட செய்தியை, விருப்பப்பட்ட தேதியில், விருப்பப்பட்ட பத்திரிக்கையில் வெளிவந்ததுபோல உருவாக்க முடியும் என அறிய முடிந்தது.

ராகுல் காந்தி போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதாக வைரலாகும் பத்திரிக்கை செய்தி போலியாக உருவாக்கப்பட்டது என தெரிய வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News