Kathir News
Begin typing your search above and press return to search.

குஜராத் கலவரம் 2002: பரப்பப்பட்ட பொய்கள் அம்பலம்!

குஜராத் கலவரம் 2002: பரப்பப்பட்ட பொய்கள் அம்பலம்!

JananiBy : Janani

  |  2 March 2021 2:39 AM GMT

2002 பெப்ரவரி 27 இல் ஒரு கொடூர சம்பவமாக அயோத்திக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த 59 இந்து யாத்திரீகளை முஸ்லீம் கும்பல் தீ வைத்து எரித்தது. அதனைத் தொடர்ந்து குஜராத்தில் மதக் கலவரம் கிளம்பியது.

இந்த சம்பவத்தின் போது பல ஊடகங்களும் தங்கள் கட்டுக்கதைகளைக் கிளப்பத் தொடங்கின. இந்த சம்பவத்துக்குக் காரணம் கர்ப்பிணியாக இருந்த முஸ்லீம் பெண்மணி இந்து கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மற்றும் அவரது வயிறு கிழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகப் பல செய்திகள் பரவின. சில செய்திகளில் மேற்கூறிய சம்பவம் கத்தியால் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட்டது.




பல அறிக்கைகள் கௌஸர் பனோ நாத்தனாரான சாய்ரா பானோ, "எனது சகோதரி கௌஸர் பானோவிற்கு பெரிய கொடூரம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அவளில் வயிற்றை அறுத்து அதிலிருந்த கருவை எடுத்து தீயில் எறிந்துள்ளனர். அவளையும் அவர்கள் எரித்தனர்," என்று கூறியதாகச் செய்திகளைப் பரப்பினர். சில கதைகளில் கருவின் தலை விதி குறித்தும் மற்றும் சில அது வாளில் அடைந்த கொடுமை குறித்தும் தெரிவித்தது. இதுபோன்ற விவரங்கள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து சொல்லப்படுகின்றன.

2010 இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் கௌஸருக்கு பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் அந்த கரு அப்படியே இருந்ததாகத் தெரிவித்திருந்தார். 2002 மார்ச் 2 இல் சிறப்பு நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் அந்த கரு பெண்மணியின் அப்படியே இருப்பதாக Dr J S கனோரியா தெரிவித்திருந்தார். அந்த கருவின் எடை 2500 கிராம் மற்றும் 45cm நீளமிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.




மேலும் அந்த பிரேதப் பரிசோதனையில், கௌஸர் பானோ மூச்சுத் திணறல், பயம் மற்றும் அதிர்ச்சியால் இறந்ததாகவும் மற்றும் அவரது உடலில் எந்த வித காயமும் இல்லை என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் அவரது பரிசோதனையின் போது எந்தவித காயமும் இல்லை என்பதைக் குறிப்பிட்டதோடு, வாளால் ஏற்பட்ட காயமும் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. Dr கனோரியா கலவரத்தின் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார் மற்றும் கரு பிரேதப் பரிசோதனையின் போது வெளியில் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். பிரேதப் பரிசோதனையானது 1 மார்ச் 2002 இல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கௌஸர் மரணம் எதிர்ச்சியாக ஏற்பட்டிருந்தாலும், ஏற்கனவே சமூகத்தில் உள்ள கசப்புகள் இவ்வாறு கூறப்பட்ட பொய்களால் எரியும் நெருப்பில் எண்ணெய்யைத் தூண்டியது போல் வன்முறையாகக் கிளம்பியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News