கேதர்நாத் அப்டேட் 2024 வைரல் வீடியோ.. பா.ஜ.கவை குறிவைத்து பரப்பும் தவறான தகவல்..
By : Bharathi Latha
தற்போது வெள்ளம் பாய்ந்தோடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “Kedarnath update 2024” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த தகவலில், “கேதார்நாத் இப்படி நடக்கும் என்று யாரும் எச்சரிக்கை செய்யவில்லையா? கேரளாவில் எச்சரிக்கை செய்ய முடிந்த அமித் ஷாவால் இதை காப்பாற்ற முடியவில்லையா?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது மத்திய பாஜக அரசை குறி வைக்க வேண்டும் என்று எண்ணி பழைய வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் உடனே அது பற்றி ஏற்கனவே எச்சரித்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் இது பற்றி மாநில அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உ.ண்மையில் இந்த வீடியோவை ஏற்கனவே சில ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிடப் பட்டு இருக்கிறது. முதலில் இந்த வீடியோவை கூகுளில் தேடல் செய்ய உதவும் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு பிறகு உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. இது 2021-ஆம் ஆண்டில் இந்த வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அனைத்திலும் இந்த சம்பவம் ஜப்பானில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜப்பானின் அட்டாமி நகாில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் பலியானதாக பல வீடியோ தான் அவை. எனவே இவை கேதார்நாத்தில் நடந்த உண்மையான நிகழ்வு கிடையாது.
Input & Image courtesy: News