தெலங்கானாவில் ஏப்ரல் 29 முதல் முழு ஊரடங்கு உண்மையா?
By : Janani
இந்தியா இரண்டாவது கொரோனா தொற்று அலையை எதிர்கொண்டிருக்கும் வேளையில், பல போலி செய்திகள் வைரலாகி வருகின்றது. அதே போன்று தற்போது ஒரு செய்தியாக தெலங்கானாவில் ஏப்ரல் 29 முதல் முழு ஊரடங்குக்குச் செல்லவுள்ளதாக வைரலாகி வருகின்றது.
இந்த குற்றச்சாட்டுகள் தவறானது ஆகும். இதனை உறுதி செய்ய ஒரு செய்தி அறிக்கை அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கையோ வெளியிடப்படவில்லை. தெலங்கானாவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கே விதிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள நாட்களில், அனைத்து அலுவலகங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவமனை, மருந்தகங்கள், இணைய சேவைகள், பெட்ரோல் நிலையங்கள், எரிவாய்வு மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற அத்தியாவசிய தேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பான செய்திக் குறிப்பைக் கண்டறியத் தெலுங்கானா அரசாங்கத்தின் வலைத்தளத்தில் சரிபார்க்கப் பட்டது மற்றும் ஊரடங்கு குறித்த சமீபத்திய உத்தரவு எதுவும் அங்குக் கிடைக்கவில்லை.
தெலுங்கானா முதலமைச்சரும் மீண்டும் ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என்பதை தெரிவித்தார். மேலும் மக்களைப் பதற்றம் அடையாமல் இருக்கவேண்டும் மற்றும் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
எனவே தெலங்கானாவில் ஏப்ரல் 29 முதல் முழு ஊரடங்கு என்ற வைரல் செய்தி போலியானது. இதே போன்று பல போலி செய்திகள் தவறாக வைரலாகி வருகின்றது.
source: https://newsmeter.in/fact-check/no-telangana-will-not-impose-complete-lockdown-from-29-april-677409