Kathir News
Begin typing your search above and press return to search.

மார்ச் 29 இல் இருந்து டெல்லியில் முழு ஊரடங்கு விதிக்க உத்தரவா?

மார்ச் 29 இல் இருந்து டெல்லியில் முழு ஊரடங்கு விதிக்க உத்தரவா?
X

JananiBy : Janani

  |  30 March 2021 5:22 AM GMT

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாம் அலை வீசுவதால் மீண்டும் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக ஒரு பழைய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் L-G அனில் பைஜல் இருவரும் டெல்லியில் மார்ச் 29 இல் இருந்து முழு ஊரடங்கு விதிக்க உத்தரவு அளித்துள்ளது போல் வலம்வருகிறது. இதனை பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.




இந்த செய்தி குறித்து அரசாங்கத்தின் உண்மை சரிபார்க்கும் குழு ஆராய்ந்த போது, டெல்லியில் கெஜ்ரிவால் அரசாங்கம் இதுபோன்று எந்த உத்தரவையும் வழங்கவில்லை என்று தெரியவந்துள்ளது. "மார்ச் 30 இல் இருந்து டெல்லியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது போன்று ஒரு வீடியோ சமூக வளைத்ததில் பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த வீடியோ கடந்த ஆண்டு 2020 இல் எடுக்கப்பட்டது," என்று PIB வெளியிட்ட கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக மீண்டும் டெல்லியில் ஊரடங்கு விதிப்பது தொடர்பாக அரசாங்கத்திடம் எந்த எண்ணமும் இல்லை என்று கடந்த வாரத் தொடக்கத்தில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்திருந்தார். "தற்போது ஊரடங்கு விதிப்பதற்கு எந்த சாத்தியமும் இல்லை. மேலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு தொடர்ந்த போதிலும், வைரஸ் பரவல் நிறுத்தப்படவில்லை. எனவே ஊரடங்கு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வு இல்லை என்று நான் எண்ணுகிறேன்," என்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் தெரிவித்தார்.




திங்கட்கிழமை வரை டெல்லியில் புதிய தொற்றுநோய் பாதிப்புகள் 1904 பதிவாகி இருந்தது. மேலும் இது நகரத்தின் மொத்த தொற்றுநோய் பரவல் 6,59,619 எட்டியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News