Kathir News
Begin typing your search above and press return to search.

சந்திரயான் 3 குறித்து பிபிசி விமர்சித்ததாக பரவும் வீடியோ: உண்மை என்ன?

சந்திரயான் 3 குறித்து பிபிசி விமர்சித்ததாக பரவும் வீடியோ: உண்மை என்ன?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Aug 2023 2:53 AM GMT

சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளும், ​​700 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இன்னும் கழிவறை வசதி இல்லாத நிலையிலும் உள்ள இந்தியா, விண்வெளி திட்டங்களும் ஏன் இவ்வளவு செலவு செய்கிறது என பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவை ஆனந்த் மகேந்திரா பகிர்ந்து இருந்தார்.


இது குறித்து தேடிய போது, இப்போது வெளியான வீடியோ இல்லை என தெரிய வருகிறது. நான்கு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தற்போது நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதால், இப்போது இந்த வீடியோவை இந்தியர்கள் தவறாக பரப்பி வருகின்றனர் என பிபிசி செய்தி நிறுவனமே விளக்கம் அளித்துள்ளது.

இப்போது பகிரப்படும் வீடியோவில் பிபிசி வேர்ல்ட் செய்தி ஊடகத்தின் லோகோ உள்ளதையும் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆனால் இந்த சேனல் தற்போது இயங்கவில்லை. எனவே பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பது உறுதியாகிறது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News