மூத்த அரசு மருத்துவர்கள் 50 பேர் திடீர் ராஜினாமா.. தொடரும் சர்ச்சை உண்மையா? கலக்கத்தில் மம்தா பானர்ஜி..
By : Bharathi Latha
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர். மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு, இளம் மருத்துவர்கள் சிலர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் துவக்கி இருக்கிறார்கள். குறிப்பாக பல்வேறு இளைஞர்கள் இந்த ஒரு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு வகைகளில் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக மேற்கு மங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசிற்கு திடீர் பிரச்சனை கிளம்பி இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று 50 மூத்த மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர்.
இந்த மருத்துவமனையில் பல்வேறு துறைகளின் தலைவர்கள் கூட்டத்தில் இன்று ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து மூத்த மருத்துவர்கள் கூறும் போது, ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த நாங்கள் 50 பேர், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மருத்துவர்களின் ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வகையில், மூத்த மருத்துவர்களாகிய நாங்கள் 50 பேரும் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளோம். உயிரிழந்த அந்த இளம் மருத்துவருக்காக எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம் என்ன ராஜினாமா செய்த 50 பேரும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News