Kathir News
Begin typing your search above and press return to search.

அமித்ஷா பதவியேற்றதிலிருந்து 5,213 நக்சல் தாக்குதல்கள்பதிவு? பொய் பரப்பும் காங்கிரஸ்!

அமித்ஷா பதவியேற்றதிலிருந்து 5,213 நக்சல் தாக்குதல்கள்பதிவு? பொய் பரப்பும் காங்கிரஸ்!

JananiBy : Janani

  |  8 April 2021 8:07 AM GMT

ஏப்ரல் 6 2021 இல் காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க முயன்றது. அதில் அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சர் ஆனதிலிருந்து நக்சல் தொடர்பான தீவிரவாத சம்பவங்கள் 5,213 பதிவாகியுள்ளது மற்றும் அதனால் ஏற்பட்ட இறப்புகள் 1,416 என்று பதிவாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியது.


உண்மையில் இந்த குற்றச்சாட்டுத் தவறானது ஆகும். பிப்ரவரி 2 2021 இல் மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலின் படி, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டின் பிடி இடதுசாரி தீவிரவாத வன்முறை தொடர்பாக 1,335 பதிவாகியுள்ளது மற்றும் 290 குடிமக்கள் இறந்துள்ளனர். மேலும் அமித்ஷா ஜூன் 2019 இல் பதவியேற்றார்.

ஏப்ரல் 3 2021 சத்தீஸ்கர் பிஜாப்பூரில் பாதுகாப்புப் படையினருக்கும், இடசாரி தீவிரவாத அமைப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 31 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகே காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது.

சத்தீஸ்கரில் அதிகமாக 2019 மற்றும் 2020 இல் 578 LWE வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதற்கடுத்த தாக ஜார்கண்டில் 399, மகாராஷ்டிராவில் 96 மற்றும் ஒடிசாவில் 95 பதிவாகியுள்ளது. நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 95 பாதுகாப்புப் படையினரும் மற்றும் 248 இடதுசாரி தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

2015 இல் மத்திய அரசாங்கம் தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நக்சல் பாதிக்கப்பட்ட இடங்களைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. LWF ஆல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 2014 இல் 11 திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

11 மாநிலங்களில் 90 மாவட்டங்களைத் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக ஜார்கண்டில் 19 பகுதிகள் உள்ளன. NDA ஆட்சியின் போது 2014 மற்றும் 2018 இல் 4,969 சம்பவம் பதிவாகியுள்ளது. 2014 வரை மொத்தம் 6,304 சம்பவங்கள் பதிவாகியுள்ளது மற்றும் 1,706 இறப்புகள் பதிவாகியுள்ளன.


2018 அக்டோபர் 7 இல் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இடதுசாரியைத் தீவிரவாத அமைப்புகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் நீக்கப்படும் என்று கூறினார். இருப்பினும் கடந்த 13 ஆண்டுகளில் இந்தியாவில் 15,000 LWE தொடர்பான சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் 5,000 குடிமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இறந்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News