கொரோனா இரண்டாம் அலை தாக்கம் 5G நெட்ஒர்க் சோதனையால் ஏற்பட்டது-வைரல் ஆடியோ உண்மையா?
By : Janani
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், மக்களிடையே பீதிகளைப் பரப்ப சமூக ஊடகங்களில் பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதே போன்று ஒரு ஆடியோ செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் தற்போது கொரோனா தொற்றின் ஏற்படும் பாதிப்பு உண்மையில் 5G நெட்ஒர்க் சோதனையின் தாக்கம் என்று அந்த ஆடியோவில் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த வைரல் செய்தியை உண்மை கண்டறியும் குழுவான PIB தவறானது என்று மறுத்தது. தற்போதைய நிலைமை மே மாத நடுவில் முன்னேறும், அப்போது 5G சோதனை நிறைவடையும் என்றும் அந்த ஆடியோ செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த சோதனையின் தாக்கத்தை எதிர்கொள்ளத் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றது.
இதனை அடுத்து PIB டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது, "தற்போது 5G நெட்ஒர்க் சோதனையால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர், இது கொரோனா தொற்றால் அல்ல என்ற ஒரு ஆடியோ செய்தி குற்றம் சாட்டி வலம் வருகின்றது. இதுபோன்ற போலியான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்," என்று அது கேட்டுக்கொண்டது.
இதேபோன்று ஒரு செய்தி 2020 யில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய போதும் பரப்பப்பட்டது. இதுபோன்ற தவறாகப் பரப்பப்படும் செய்திகள் குறித்து அரசாங்கம் மக்களை மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்கிறது.
இதுபோன்ற செய்திகளை நம்புவதற்கு முன்பு அரசாங்கத்தின் சில அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரி பார்த்துக் கொள்ளுமாறும் அது கேட்டுக்கொண்டது.
source: https://www.latestly.com/social-viral/fact-check/covid-19-second-wave-is-nothing-but-effect-of-5g-network-testing-pib-fact-check-debunks-fake-viral-audio-message-2464892.html