கொரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் 7 நாட்கள் லாக்டவுன் போடப்படுமா? அரசு கொடுத்த விளக்கம் என்ன?
By : Kathir Webdesk
சீனாவில் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரு வாரத்திற்கு லாக்டவுன் போடப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. இந்த தகவலுக்கு மத்திய அரசின் பிஐபி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் 7 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட் போலியாக தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டது.
இதை உண்மை என நம்பிய பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இப்படி ஒரு ஸ்க்ரீன் ஷாட் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வந்தது. இதையடுத்து மத்திய அரசின் பிஐபி ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை மறுத்து பதிவிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய அந்த தகவல் முற்றிலும் தவறானது. இந்தியாவில் பிஎப் 7 வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.