Kathir News
Begin typing your search above and press return to search.

சக மாணவனை அரிவாளால் வெட்டிய 9ஆம் வகுப்பு மாணவர்.. தமிழக மாணவர்களிடையே அதிகரிக்கும் வன்மம்.. உண்மையா?

சக மாணவனை அரிவாளால் வெட்டிய 9ஆம் வகுப்பு மாணவர்.. தமிழக மாணவர்களிடையே அதிகரிக்கும் வன்மம்.. உண்மையா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Aug 2024 2:33 PM GMT

திருநெல்வேலி மாவட்டம் விஜய நாராயணம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சக மாணவரை அரிவாளால் 9ம் வகுப்பு மாணவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான செய்தி தான் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? குறிப்பாக அதிக அளவில் கடந்த காலங்களை விட மாணவர்கள் இத்தகைய வன்மையான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் முதல் முறையல்ல. ஏற்கனவே, நாங்குநேரியில் ஜாதி காரணமாக 12ஆம் வகுப்பு படித்த மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தற்போது இதுபோன்று மீண்டும் ஒரு நாங்குநேரி சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் கேந்திரிய வித்தியாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும், இரு மாணவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மாணவர் ஒருவர் தெரியாமல் சக மாணவன் இடத்தில் தண்ணீரை சிந்தியதால் ஆத்திரமடைந்த சக மாணவன் அந்த மாணவனுடன் வாக்குவாதம் செய்து சண்டையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ஆத்திரம் தீராத மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து சிறிய அரிவாளை கொண்டு வந்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவரை ஆசிரியர்கள், மாணவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக விஜயநாராயணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? எந்த காரணத்திற்காக மாணவன் இப்படி நடந்து கொண்டான்? என்று பல்வேறு விதங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News