மத்திய அரசின் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டும் தி.மு.க.. மாணவர்களுக்கான AI பயிற்சியின் பின்னணி என்ன?
By : Bharathi Latha
தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஆட்சிப் பதவி ஏற்ற காலத்தில் இருந்து மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தங்களுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்த புதிய திட்டம் போல் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழக பாஜக சார்பில் இருந்து இந்த குற்றச்சாட்டு பெருமளவில் இருந்து வருகிறது. ஏனென்றால் மத்திய அரசு கொண்டுவரும் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் திமுக ஆட்சியில் அவர்களுடைய திட்டம் போல் வேறு பெயர்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக மாணவ மாணவிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு லட்சம் மாணவ மாணவிகள் பயனடையை இருக்கிறார்கள். இது உண்மையில் மத்திய அரசின் தீக்க்ஷா அமைப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும். இப்படி மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு தங்களுடைய ஸ்டிக்கர்களை ஒட்டும் வேலையை திமுக செய்து வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகிறது.
இதன் உண்மை பின்னணி என்ன? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவில், மத்திய அரசின் தீக்க்ஷா திட்டத்தின் மூலமாகத்தான், Oracle நிறுவனம் இந்த ஒரு திட்டத்தை தமிழகத்தில் தொடங்கி இரண்டு லட்சம் மாணவ மாணவிகளுக்கு செயற்கை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளிக்க இருப்பது தெரிய வந்து இருக்கிறது.
Input & Image courtesy: News