Kathir News
Begin typing your search above and press return to search.

யோகி அரசாங்கத்தின் சாதனை குறித்து தவறான செய்தியை வெளியிட்டுள்ள BBC - பின்னணி என்ன ?

யோகி அரசாங்கத்தின் சாதனை குறித்து தவறான செய்தியை வெளியிட்டுள்ள BBC - பின்னணி என்ன ?

JananiBy : Janani

  |  26 March 2021 4:44 AM GMT

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மார்ச் 19 2021 இல் தனது அரசாங்கத்தின் நான்கு ஆண்டுகளை மாநிலத்தில் நிறைவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்யநாத், தனது அரசாங்கத்தின் நான்கு ஆண்டின் சாதனைகளைத் தெரிவித்தார். இருப்பினும் BBC செய்தி நிறுவனம் ஆதித்யநாத் முன்வைத்த கூற்றுகளை ஒப்புக்கொள்ளாமல், மாறாக நான்கு ஆண்டுகளில் தனது சாதனைகள் குறித்து தவறான கூற்றுகளைத் தெரிவிக்கிறார் என்ற குற்றச்சாட்டையே முன்வைக்க முயன்றுள்ளது.


நான்கு ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சி குறித்துப் பேசிய யோகி, இந்த நான்கு ஆண்டுகளில் குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கத்தின் சகிப்புத்தன்மை அற்ற கொள்கை சாதகமான முடிவுகளைக் கொண்டுவந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தில், டகாய்ட் வழக்குகள் 66 சதவீதம் குறைந்துள்ளது, கற்பழிப்பு வழக்குகள் 45 சதவீதம் குறைந்துள்ளது மற்றும் கொலை வழக்குகள் 19 சதவீதம் குறைந்துள்ளது என்று குறிப்பிட்டு, மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவித இனவாத கலவரமும் காணவில்லை என்றும் கூறினார்.

யோகி தனது அரசாங்கத்தின் நான்கு ஆண்டுகளின் வளர்ச்சி மற்றும் வன்முறைக்கு எதிராக அதன் வெற்றி குறித்துப் பேசிய சில மணி நேரத்திலேயே, ஏற்கனவே மோடிக்கு எதிரான பிரச்சாரம், இந்தியாவிற்கு எதிரான கூற்றுகளை வெளியிட்டுள்ள BBC ஊடகம் அதன் இந்தி வலைத்தளத்தில் யோகி ஆதித்யானத்தின் குழப்பும் முயற்சியில் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது.


அந்த செய்தி அறிக்கையில் 2012 மற்றும் 2015 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் குற்ற விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது, மீண்டும் 2019 இல் குறையத் தொடங்கியது இது யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் விவகாரத் துறை அமைச்சராக இருந்த போது என்று கூறியது. மேலும் யோகி ஆட்சிக்கு வந்த பொழுது 2018 மற்றும் 2019 ஆண்டில் 10 மற்றும் 3 சதவீதம் குற்றம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டது.



இதுதவிர உத்தரப் பிரதேசத்தின் இனவாத கலவரங்கள் எதுவும் இல்லை என்ற அரசாங்கத்தின் கூற்றையும் மறுத்துவிட்டது. அது NCRB அறிக்கையின் 2018 இல் வழக்குகள் குறையத் தொடங்கினாலும் இது மகாராஷ்டிரா மற்றும் பீகாருக்கு அடுத்து அதிகம் உள்ளது என்றும் கூறியது. யோகி ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரப் பிரதேசத்தில் இனவாத கலவர வழக்குகள் இல்லை என்று தெரிவித்திருந்தது ஆனால் அறிக்கைகள் அவர் கூற்றுக்கு எதிராக உள்ளன என்று தெரிவித்திருந்தது.



இந்த BBC குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர் அதனை முறியடிக்கும் வகையில் உத்தரப் பிரதேச காவல்துறை உண்மையான புள்ளி விவரங்களைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அந்த ட்விட்டில் 2016 முதல் 2019 வரை குற்ற வழக்குகளின் புள்ளிவிவரங்களைப் பதிவு செய்தது. இது முற்றிலும் BBC குற்றச்சாட்டுக்கு எதிராக இருந்தது. மாநிலத்தில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும் குற்ற வழக்குகள் யோகி தலைமையிலான அரசாங்கத்தில் சரிவையே கண்டுள்ளது என்று குறிப்பிட்டது. இடதுசாரி ஊடகம் தனது கசப்பான உண்மையை முன்வைக்க முயன்றாலும், உண்மையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் குற்ற வழக்குகள் சரிவையே கண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News