நாடு தழுவிய ஊரடங்கு குறித்த முன்னாள் CBI இயக்குநர் வைரல் ஆடியோ உண்மையா?
By : Janani
தற்போது சமூக ஊடகத்தில் ஒரு வைரல் செய்தியாக முன்னாள் CBI இணை இயக்குநர்(JD) லட்சுமி நாராயணன் அவரது குரல் பதிவு ஒரு வலம் வருகின்றது.
சில ஊடக பயனாளர்கள், "முன்னாள் CBI இணை இயக்குநர் லட்சுமி நாராயணன் அவரது குரல் பதிவு ஒன்று வாட்ஸ்ஆப்பில் பகிரப்படுகின்றது. ஜூன் 1 வரை எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கூறப்பட்டுள்ளது," என்று கூறி பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியா அடுத்த இரண்டு மாதங்களுக்கு முழு ஊரடங்குக்குச் செல்லவுள்ளது, எனவே தேவையான பணம், உணவு மற்றும் மருந்துகளுடன் தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அந்த ஆடியோவில் கூறப்பட்டிருந்தது. அந்த குரல் பதிவில் தெலுங்கில் பேசிய அவர்,தனது உறவினர் உலக சுகாதார மையத்தில் வேலை செய்வதாகவும் அவர் இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கு விதிக்கவுள்ளதாகத் தெரிவித்ததாகத் தெரிவித்தார்.
தற்போது நாடு கொரோனாவின் இரண்டாம் அலையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேலையில் இந்த ஆடியோ பரப்பப்பட்டு வருகின்றது.
இதனை டிவிட்டரில் பகிர்ந்த பயனாளர் ஒருவர், " இது என்னுடைய முன்னாள் CBI இயக்குநர் லட்சுமி நாராயணன் வாட்ஸ்ஆப் மூலம் பெற்றேன். இந்திய ஜூன் மாதம் வரை ஊரடங்குக்குச் செல்லவுள்ளது. வங்கியும் செயல்படாது என்று அவர் கூறினார். இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை," என்று கூறியிருந்தார்.
தற்போது வைரலாகி வரும் இந்த செய்தி போலியானது ஆகும். மேலும் முன்னாள் CBI இணை இயக்குநர் வெளியிட்டதாகக் கூறப்படும் ஆடியோவும் தவறானது ஆகும். இந்த போலியானது என்று தெரிவித்து முன்னாள் CBI இணை இயக்குநர் லட்சுமி நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுபோன்ற போலி ஆடியோவை வெளியிட்டு மக்களைப் பதற்றமடைய முயல்கின்றனர். இந்த வீடியோ மார்ச் 2020 இல் வெளியிடப்பட்டது.
தற்போது மீண்டும் ஆடியோ வைரலாகி வந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்துத் தெளிவுபடுத்தினார். "என்னுடைய பேரைப் பயன்படுத்தி ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இது போலியானது, இதனை யாரும் பகிர வேண்டாம்," என்று கேட்டுக்கொண்டார்.
செய்திக் குறிப்பில், இதுபோன்ற ஆடியோவை யாரும் உடனடியாக நம்பவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, தற்போது வைரலாகி வரும் முன்னாள் CBI இணை இயக்குநர் லட்சுமி நாராயணன் குறித்த ஆடியோ போலியானது ஆகும்.
source: https://newsmeter.in/fact-check/no-nation-wide-lockdown-voice-message-of-former-cbi-jd-is-fake-677430