கர்நாடகத்தில் மாணவர்கள் தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றினார்களா? நடந்தது என்ன கதிர் #FactCheck

By : Mohan Raj
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் மாணவர் ஒருவர் தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை இயற்றியது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு வதந்திகள் உலா வரும் நிலையில் அதுதொடர்பாக சிவமொக்கா எஸ்.பி லக்ஷ்மி பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில் கொடிக்கம்பம் ஒன்றிலிருந்து தேசியக்கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடி ஏற்றினார் என்ற செய்தி தமிழக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சை எழுந்துள்ளது, இதுதொடர்பான வீடியோ ஒன்றில் மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர் அவர்கள் காவி கொடியசத்து காணப்பட்டனர் ஆனால் அந்த வீடியோவில் தேசியக்கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றிய எந்த ஒரு வித பதிவும் இல்லை.
ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால் அந்த கொடிக் கம்பத்தில் தேசியக்கொடி இல்லை அது வெறும் கொடிக்கம்பம் மட்டுமே அதில் ஏறி காவி கொடியை மட்டும் கம்பத்தில் கட்டினர் மாணவர்கள். அப்படி கட்டிய மாணவர்கள் தேசிய கொடியை நீக்கிவிட்டு காவி கொடியை கட்டவில்லை அதன்பிறகு அவர்களே அந்த காவி கொடியை கீழே இறக்கி விட்டனர் என்ற உண்மை வெளிவந்துள்ளது. இதுதடர்பாக சிவமொக்கா எஸ்.பி இலஷ்மி பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், "அவர்கள் அனைவரும் மாணவர்கள் அவர்கள் எந்த தேசியக் கொடியையும் இறக்கவில்லை மாறாக வெறும் கொடிக்கம்பத்தில் மட்டுமே காவி கொடியை ஏற்றினர். பின்பு அவர்களே இறக்கி விட்டனர் இதுகுறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்ணாம் எனவும், மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் எனவும்" கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிது படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தி அதில் அரசியல் செய்யவே என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
