மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் முடிவு குறித்து IB கணிப்பு நடத்தியதா ?
By : Janani
மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை ஒரு ஒரு கட்டமாகப் பிரித்து நடைபெறுகிறது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 இல் நடைபெறவுள்ளது, இதற்கிடையில் ஏப்ரல் 6 இல் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும் தேர்தல் தொடர்பாகப் பல தகவல்கள் சமூக ஊடகத்தில் பரப்பப்பட்டு வருகின்றது. அதில் சில புகைப்படங்கள் புலனாய்வு அமைச்சகம்(IB), மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் குறித்த முடிவினை கணிப்பு செய்ததாகக் கூறி வலம்வருகின்றது.
மார்ச் 22 2021 தேதியிட்ட ஒரு அறிக்கையில், "IB நடத்திய மதிப்பீட்டின் படி, மேற்கு வங்காளத்தில் 2021 இல் நடக்கவிருக்கும் தேர்தலில் TMC மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. மாநிலத்தில் 240 மேலாக TMC வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டிருந்தது. இந்த கணக்கெடுப்பானது மார்ச் 10 மற்றும் மார்ச் 21 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிராமங்களில் நடைபெற்றது.
அதே போன்று தமிழ்நாடு தேர்தல் குறித்த மார்ச் 23 2021 தேதியிட்ட ஒரு ஆவணமும் சமூக ஊடகத்தில் காணப்பட்டது. "IB நடத்திய கருத்துக்கணிப்பின் படி, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிக வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிக்கிறது," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த கணிப்புகள் புலனாய்வு அமைச்சகத்தால் எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டு வருவது தவறானது ஆகும். உண்மையில் இதுபோன்ற ஒரு கணக்கெடுப்பைப் புலனாய்வு அமைச்சகம் நடத்தவில்லை. IB இந்தியாவின் உளவுத்துறையாகவும் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளையும் செயல்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த அமைச்சகம் வெளிநாட்டு ஏஜென்சி மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் பாதுகாப்பு ஏஜென்சி உடனும் இணைந்து செயல்படுகின்றது.
தேர்தல் முடிவுகள் இன்னும் கண்டிக்கவில்லை மற்றும் அமைச்சகத்தால் இதுபோன்ற கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை. மேலும் இதுபோன்ற ஆவணங்களை அமைச்சகம் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடவில்லை.
தற்போது வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை சில தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் போலியானது என்று கூறி பகிர்ந்து வருகின்றனர். மேலும் புலனாய்வு அமைச்சகம் இதுபோன்று அறிக்கைகளை நாங்கள் வெளியிடவில்லை என்று டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
எனவே புலனாய்வு அமைச்சகம் தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது என்று கூறப்பட்டு வருவது பொய்யானது மற்றும் தவறானது ஆகும்.