பிரதமர் மோடி குறித்து தவறாக வீடியோவை பகிர்ந்து வரும் காங்கிரஸ் IT செல்.!
By : Janani
அசாமில் சட்டமன்ற தேர்தல், காங்கிரஸ் IT செல் தவறான கருத்துக்களைப் பரப்ப முயற்சி செய்து வருகிறது. சமீபத்தில் பா.ஜ.க வை விமர்சிக்கக் காங்கிரஸ் IT செல் தலைவர் ரோஹன் குப்தா, பிரதமர் மோடியின் அசாம் பேரணியின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவின் கட் செய்த பகுதியை மட்டும் டிவிட்டரில் பகிர்ந்து தவறாக விமர்சித்துள்ளார்.
அந்த வீடியோவில் பிரதமர் மோடி ஏழைகளைத் தேர்தலுக்காகச் சுரண்டுகிறார் என்று விமர்சித்தார். மேலும் குப்தா பகிர்ந்த அந்த கட் செய்யப்பட்ட வீடியோவில், பிரதமர் ஏழைகளின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களை ஆதரிக்கிறார் என்ற தோற்றத்தில் கூறியிருந்தார்.
அந்த வீடியோவில் பிரதமர் மோடி, எவ்வாறு காங்கிரஸ் ஏழை மக்களுக்குத் தவறான வாக்குறுதிகளை அளிக்கிறது மற்றும் ஏழைகளைச் சுரண்டுகிறது என்பது குறித்து விரிவாகப் பேசியிருந்தார். ஆனால் குப்தா இதை அனைத்தையும் தெளிவாகக் கட் செய்து பதிவு செய்துள்ளார். இங்கு வாக்குகளுக்காகக் காங்கிரஸ் எவ்வாறு ஏழைகளை ஏமாற்றுகிறது என்று பிரதமர் விமர்சித்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
"காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில் நடைமுறையாக வைத்திருக்கிறது. ஏழைகளுக்கு ஆசைகளைத் தூண்டி, பொய்களைக் கூறி ஒருவருக்கொருவர் சண்டைகள் மூடி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதே காங்கிரஸ்யின் கொள்கை," என்று என்று பிரதமர் கூறியிருந்தார்.
மேலும் காங்கிரஸ் மற்றும் அதன் ஊடக கூட்டாளிகளும் கட்சியைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறான வீடியோக்களை பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது பகிரப் பட்டுள்ள முழு வீடியோவின் சிறிய பக்கம், பா.ஜ.க அரசாங்கத்தை மோசமான பிம்பத்தில் காண்பிக்கும் எண்ணங்களுடன் பகிரப்பட்டது.
டிசம்பர் 2020 காங்கிரஸ் தலைவர் பதிவிட்ட பொய்யான வீடீயோவை பா.ஜ.க IT செல் தலைவர் அமித் மால்வியா பகிர்ந்தார். ராகுல் காந்தி பதிவு செய்த அந்த புகைப்படத்தில் காவல் அதிகாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட விவசாயி ஒருவரைத் தாக்கியது போல் காணப்பட்டது. ஆனால் அந்த சம்பவம் குறித்த முழு வீடியோ பகிரப்படவில்லை. அதில் அந்த அதிகாரி போராட்டக்காரரை பயம்புடுத்துவதற்காக லத்தியைக் காற்றில் வீசினார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இதுபோல் காங்கிரஸ் தவறான மற்றும் போலி குற்றச்சாட்டுகள் கொண்ட வீடியோவை பகிர்ந்துவருவது இது முதன்முறை அல்ல. பல சமயங்களில் அது செய்துவரும் போலித்தனமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.