பான் மசாலா போட்ட MLA: பிரதமர் மோடி எடுத்த ஆக்சன் என்ன?

வடமாநிலங்களில் பான் மசாலா போடும் பழக்கம் அதிகரித்துள்ளது. தற்போது இந்த பழக்கம் தமிழர்களுக்கும் தொற்றிவிட்டது. பான்மசாலா போட்டு கண்ட இடத்தில் எச்சில் துப்புவதில் வட மாநிலத்தவர் தான் முதலிடத்தில் உள்ளனர். உ.பி.சட்டசபை வளாகத்தில் எம்.எல்.ஏ ஒருவர் பான் மசாலா எச்சிலை வெள்ளை சுவற்றில் துப்பி கரையாக்கிவிட்டார். எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம் என கூறும் பிரதமரும், உ.பி சட்டசபை சபாநாயக்கரும் எம்.எல்.ஏ வை கண்டித்தானர். ஆனால் அவருடைய பெயரை வெளியிடவில்லை. இப்படிப்பட்டசுத்தம் இல்லாத பான் மசாலா போட்டவர்களை அலுவலகத்திற்கு உள்ளே அனுமதிக்க தடை விதிக்க வேண்டும்.இது அலுவலகத்திற்குள் அநாகரிகமாக நடக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும்.
இந்த விஷயம் தெரிந்த உடன் பிரதமர் அலுவலகத்தில் இருந்து சபாநாயகருக்கு போன் அடித்து, அசுத்தம் செய்தவரை இப்படி சும்மா விடக்கூடாது. தூய்மை இந்தியா என திட்டத்தை நிறைவேற்றி வரும் மக்கள் பிரதிநிதி நாம். இதற்கு தக்க தண்டனையை அவருக்கு தர வேண்டும். யாராக இருந்தாலும் அந்த எம்.எல்.ஏ.விற்கு ஒரு மாத சம்பளத்தை கட் செய்ய வேண்டும் என கூறினாராம் பிரதமர் நரேந்திர மோடி.