பொய் செய்தி யார் பரப்புவது? - SG சூர்யா விவகாரத்தை திசை திருப்ப முயலும் எம்.பி.வெங்கடேசன்!
By : Mohan Raj
நேற்று இரவு பாஜக மாநில செயலாளர் SG சூர்யா கைது செய்யப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.
கடந்த ஜூன் ஏழாம் தேதி SG சூர்யா தனது ட்விட்டர் பதிவில், கடலூர் பெண்ணாடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமலால் தூய்மை பணியாளர் ஒருவரை வேலையை செய்ய சொன்னதன் காரணமாக அந்த தூய்மை பணியாளரின் உயிர் அநியாயமாக பறி போனது என குறுப்பிட்டிருந்தார்.
இதை கண்டித்து அறிக்கையாக பாஜக மாநில செயலாளர் SG சூர்யா மதுரை எம்.பி வெங்கடேசனிடம் 'உங்கள் கட்சியின் கவுன்சிலர் தானே எம்பி வெங்கடேசன் அவர்களே! இதனை ஏன் நீங்கள் கேட்கக்கூடாது? எதற்காக நீங்கள் புரட்சி பேசுகிறார்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு தற்பொழுது காவல்துறை வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அதிரடியாக சென்னையில் உள்ள சூர்யாவின் வீட்டில் வைத்து 11 மணி அளவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காலையிலிருந்து சமூக வலைதளங்களில் SG சூர்யாவுக்கு ஆதரவாக பலர் குரல் எழுப்பி வரும் நிலையில் கடலூர் பெண்ணாடத்தில் நடந்த விவகாரத்தை மறைக்கும் விதமாக எம்பி வெங்கடேசன் அதை 'மதுரை பெண்ணாடம் என்ற ஊரே இல்லை ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள்' என கேட்டு ட்வீட் செய்துள்ளார். உண்மையில் சம்பவம் நடந்தது கடலூர் பெண்ணாடத்தில்தான், சூர்யா வெளியிட்ட அறிக்கையில் தவறுதலாக மதுரை என அச்சாகி இருந்தது ஆனால் அடுத்தபடியாக அவர் கடலூர் பெண்ணாடம் என மறு அறிக்கை கொடுத்துவிட்டார்.
அப்படி இருக்கும் சமயத்தில் எங்கே கம்யூனிச கட்சி உறுப்பினரால் தலித் தூய்மை பணியாளர் உயிர் போனதால் நம் மீது அரசியல் ரீதியாக விமர்சனம் வந்துவிடுமோ என பயந்து இந்த விவகாரத்தை பொய் என திரித்துக்கூற பார்க்கிறார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு எம்.பி நடந்த விவகாரம் என்ன என தெரிந்தும் இப்படி அதனை திரிக்க முயற்சி செய்வதை பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.