ஹர்மந்திர் சாஹிப்கு முகக்கவசம் அணியவேண்டாம் என்று SGPC கேட்டுக்கொண்டது உண்மையா?
By : Janani
ஏப்ரல் 18 இந்தியாவில் 2,60,000 கொரோனா தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு வரும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். ஆனால் சமுக வலைத்தளங்களில் ஒரு பார்வேர்ட் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது. அதில் அமிர்ஸ்டரில் உள்ள ஹர்மந்திர் சாஹிப் குருத்துவாராவில் யாரும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்த உண்மையைக் கண்டறிய OpIndia கடந்த ஒருவாரத்தில் ஹர்மந்திர் சாஹிப் குருத்வாரா குறித்த செய்தியை சமூக வலைத்தளங்களில் மற்றும் செய்தி தளங்களில் தேடியது. மேலும் கடந்த ஆண்டு SGPC நெறிமுறைகளை கடைப்பிடிக்க மறுத்துவிட்டது என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல செய்தி தளங்கள் ஹர்மந்திர் சாஹிப்பில் பலர் முக கவசம் அணியவில்லை என்று கூறியிருந்தது.
கடந்த ஆண்டும் ஜூன் மாதம் அனைத்து மத தளங்களும் மக்களுக்காகத் திறக்கப்பட நிலையில், SGPC அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற வழிமுறையைப் பின்பற்ற மறுத்து விட்டது. கோல்டன் டெம்பிள்கு செப்டம்பர் 2020 இல் சென்று தி பிரிண்ட் பார்வையிட்ட போது அங்கு யாரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்பதைக் கண்டறிந்தது.
மேலும் வளாகத்தில் இருக்கும் காவல்துறையும் முக கவசம் அணியவில்லை. முகக்கவசம் அணியாததற்கான காரணம் கேட்ட பொழுது, "நாங்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், எங்களைக் கடவுள் பார்த்துக்கொள்வார்," என்று கூறினர். பஞ்சாப் ஏப்ரல் மாதத்தில் இருந்தே அதிக தொற்று எண்ணிக்கையைப் பதிவு செய்து வருகின்றது.இதனால் பஞ்சாபில் சில மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 24 இல் தி ட்ரிபியூன் செய்தி அறிக்கையின் படி, ஹர்மந்திர் சாஹிப் கோவில் நிர்வாகம் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றுவதைப் பக்தர்கள் கையில் கொடுத்து விட்டதாகத் தெரிவித்தது. அங்கு முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம் இல்லை.
ஏப்ரல் 2 இல் காங்கிரஸ் தலைமையிலான அமிர்ஸ்டர் நிர்வாகம் SGPC நிர்வாகத்தைச் சந்தித்தது. இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமானது கொரோனா வழிமுறைகளை ஹர்மந்திர் சாஹிப்பில் கடைப்பிடிப்பது. இந்த கூட்டத்திற்குப் பிறகு, பக்தர்களை கொரோனா வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்துவதாக SGPC தலைமைச் செயலாளர் ஹாஜிந்தர் சிங் தாமி தெரிவித்தார். இருப்பினும் அவர் கோல்டன் டெம்பிள்கு உள்ளே பக்தர்களை முக கவசம் அணியக் கட்டாயப்படுத்தப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
பைசாகி போது ஆயிரக்கணக்கான மக்கள் ஹர்மந்திர் சாஹிப்கு சென்றனர். அதில் யாரும் முகக்கவசம் அணியவில்லை என்று ANI செய்தி அறிக்கை வெளியிட்டது. பைசாகி அமிர்ஸ்டர் மற்றும் SGPC நிர்வாகத்தினருக்கு இடையே நடத்தக் கூட்டத்தின் 10 நாட்களுக்குப் பிறகு நடைபெற்றது. பைசாகியில் இருந்து ஐந்து நாட்களுக்கு மாநிலம் 4000 கொரோனா தொற்று எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது. அங்கு SGPC பக்தர்களை முக கவசம் அணிய அறிவுறுத்தியது சில மக்கள் மட்டுமே அணிந்திருந்தனர். சமூக இடைவெளி அணுகு பின்பற்றவில்லை.
கொரோனா வழிமுறைகளைப் பின்பற்ற மக்களை SGPC அறிவுறுத்துவதாகக் கூறிய போதிலும், மக்கள் சீக்கிய கோவிலுக்குள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்ற விரும்பவில்லை. முன்னர் போன்று SGPC நிர்வாகம் அவர்களை முக கவசம் அணியவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவில்லை, இருப்பினும் முகக்கவசம் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றுவதை கட்டாயமாக்கவும் இல்லை.
Source: http://www.opindia.com/2021/04/fact-check-on-claim-that-sgpc-asking-devotees-not-to-wear-mask-at-harmandir-sahib/