பத்து கொடிய உணவுகள் குறித்த பட்டியலை வெளியிட்டதா WHO? உண்மை என்ன?
By : Janani
உலக சுகாதார மையம்(WHO) கொடியது என்று சான்றிதழ் அளித்து பட்டியலிட்டதாக பத்து உணவு பெயர்கள் கொண்ட புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.
அந்த புகைப்படத்தில் WHO வின் லோகோவும் காணப்பட்டது. மேலும் அந்த பத்து கொடிய உணவுகளில் எட்டு பிலிபைன்ஸில் காணப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது வைரலாகி வரும் இந்த இடுக்கு போலியானது ஆகும்.
இந்த வைரல் செய்தி குறித்த இடுகை உலக சுகாதார மையத்தின் வலைத்தளத்தில் நியூஸ்மீட்டர் சோதனை செய்தபோது அதுபோன்ற செய்தி எதுவும் கண்டறியவில்லை. மேலும் ஜூன் 17 2016 தேதியிட்ட ஒரு இடுக்கில் இதே வைரல் செய்தியை மறுத்து ஒரு ட்விட்டை WHO வெளியிட்டிருந்தது. 2020 ஏப்ரல் 29 இல் வெளியிட்ட ஒரு இடுக்கும் காணப்பட்டது.
மேலும் ஆரோக்கியமான உணவுகளை ஊக்குவிப்பதகவ்ம் WHO தெரிவித்திருந்தது. "10 கொடிய உணவுகள் குறித்த பட்டியலை வெளியிட்டது WHO இல்லை," என்றும் அந்த டிவிட்டில் கூறியிருந்தது.
இதுபோன்ற ஆலோசனைகளை பொதுவாக WHO விடம் இருந்து ஊடகங்கள் கேட்டுக்கொள்ளும். இது போன்ற பட்டியல் கொண்ட செய்தியும் ஊடகங்களிலும் காணப்படவில்லை.
எனவே இதுபோன்ற ஆலோசனைகள் WHO வெளியிடவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. மேலும் இந்த வைரல் செய்தி 2016 முதல் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
Source: நியூஸ் மீட்டர்