Kathir News
Begin typing your search above and press return to search.

நடுநிலை தவறும் YouTurn? போலி செய்திகளை கண்டுபிடிப்பதாக கூறி கருத்து திணிப்பு!

நடுநிலை தவறும் YouTurn? போலி செய்திகளை கண்டுபிடிப்பதாக கூறி கருத்து திணிப்பு!

MuruganandhamBy : Muruganandham

  |  25 March 2021 2:32 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 122 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று ஜனநாயக கூட்டமைப்பு (Democracy Network) மற்றும் உங்கள் குரல் அமைப்பின் கருத்து கணிப்புகள் தமிழக முன்னணி ஊடகங்களில் வெளியானது.

கருத்துக்கணிப்பு வெளியான உடனே, Democracy Times Network என்ற ட்விட்டர் பக்கத்தில் எங்களுக்கும், தமிழக மீடியாவில் வெளியான செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற மறுப்பு அறிக்கையை வெளியிட்டது.

இந்த குழப்பத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட YouYurn ஊடகம், கருத்து கணிப்பு தொடர்பாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று சொல்லியும், Democracy Times Network மறுப்பு அறிக்கை வெளியிட்டதை மேற்கோள் காட்டி ஒரு சாக்குபோக்கான factcheck ஒன்றை செய்து செய்தி வெளியிட்டது.

உண்மையில், Democracy Times Network வேறு Democracy Network வேறு என்ற வித்தியாசம் கூட, அங்கீகாரம் பெற்ற YouTurn Fact Check செய்தி நிறுவனத்துக்கு தெரியவில்லை.

இன்றைக்கு அதே, Democracy Network கருத்துக்கணிப்பை மேற்கோள்காட்டி, நியூஸ் 7 ஊடகம், தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சியை தக்க வைக்கும் என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

இதற்கும் அவர்கள் Fact Check செய்வார்களா? இல்லை தி.மு.க ஆதரவு ஊடகம் என்பதால், கண்டும் காணாமல் விடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News