18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏப்ரல் 24 முதல் முன்பதிவு-உண்மையா?
By : Janani
தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏப்ரல் 24 முதல் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதற்காகப் பதிவு செய்யும் போர்டல் ஏப்ரல் 24 முதல் தொடங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வைரல் செய்தி உண்மை அல்ல. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான போடவுள்ள கொரோனா தடுப்பூசி பதிவு செய்ய CoWIN இணையதளம் மற்றும் ஆரோக்கிய சேது ஆப் ஏப்ரல் 28 முதல் திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்த செய்தி பல ஊடக தளத்திலும் ஆராயப்பட்டது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மூன்றாம் கட்டமாக மே 1 முதல் தொடங்கவுள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 28 முதல் தொடங்கவுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வைரல் செய்திக்குப் பிறகு, இதனை மறுத்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தைப் போன்றே இதற்கும் முன்பதிவு செய்ய ஆரோக்கிய சேது ஆப் மற்றும் CoWIN இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே 18 வயது மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 28 முதலே முன்பதிவு தொடங்குகிறது. ஏப்ரல் 24 முதல் முன்பதிவு தொடங்குகிறது என்பது தவறாக வைரலாகி வருகின்றது.
source: https://newsmeter.in/fact-check/fact-check-vaccine-registration-for-people-above-18-years-begins-from-april-28-677384