3வது முறையாக பிரதமராகும் மோடி.. இதற்காக இலவச ரீசார்ஜ் வழங்குகிறதா பா.ஜ.க?
By : Bharathi Latha
2024 தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடியும், பா.ஜ.கவும் ஒவ்வொரு இந்தியருக்கும் மூன்று மாதங்களுக்கு இலவச மொபைல் ரீசார்ஜ் வழங்குவதாகக் கூறி, தெரியாத இணையதளங்களுக்கான இணைப்புகளைக் கொண்ட பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன. குறிப்பாக இந்த பதிவுகள் வாட்ஸ் அப்பில் அதிகமாக பரவப்பட்ட வருகிறது. மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பத்தில் பா.ஜ.கவோ அல்லது பிரதமர் மோடியோ இலவச ரீசார்ஜ் எதையும் வழங்கவில்லை.
இந்த வைரல் பதிவுகள் போலியானவை. 3வது முறையாக ஆட்சி அமைக்கும் போது பா.ஜ.கவோ அல்லது பிரதமர் மோடியோ இலவச ரீசார்ஜ் எதையும் வழங்கவில்லை. மேலும் இது தொடர்பாக ஷேர் செய்யப்படும் தகவல் அடங்கிய இணைப்புகள் சந்தேகத்திற்குரிய வலைத்தளங்களுக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. இதுபோன்ற போலி செய்திகள் மற்றும் இணையதளங்கள் மூலம் சைபர் கிரைம் குற்றவாளிகள் இணையக் குற்றங்களில் ஈடுபடுவது குறித்து ஏராளமான செய்திகள் வெளியாகி வருகின்றன.
மேலும், ஃபேஸ்புக் பதிவில், உத்தரகாண்ட் சாமோலி காவல்துறை இந்த பதிவு போலியானது என்று தெளிவு படுத்தியது மற்றும் இதுபோன்ற தெரியாத இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியது. எனவே, இதில் கூறப்பட்ட கூற்று தவறானது. பிரதமர் மோடியின் இலவச ரீசார்ஜ் திட்டங்களைக் கூறும் இதே போன்ற இணைப்புகள் இதற்கு முன்பு வைரலான போது, இந்திய அரசாங்கமோ அல்லது பிரதமர் மோடியோ அத்தகைய திட்டத்தை நடத்தவில்லை என்று பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: NDTV