Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைன் மாணவர்கள் மீட்பில் தி.மு.க நிர்வாகியின் நிறுவனத்துக்கு கை மாறிய பணம் - RTI தகவலில் வெளிவரும் மோசடி!

உக்ரைன் மாணவர்கள் மீட்பில் தி.மு.க நிர்வாகியின் நிறுவனத்துக்கு கை மாறிய பணம் - RTI தகவலில் வெளிவரும் மோசடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 May 2022 1:56 AM GMT

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாக அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஆபரே‌ஷன் கங்கா என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்தப் பணிகளுக்கு தங்கள் பங்கிற்கு ரூ.3.26 கோடி செலவு ஆனதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பொது துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், உக்ரைனில் இருந்து வந்த 1,890 மாணவர்களில் 1,524 பேர் அரசு செலவில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.3.26 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டதின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டது. அதில் மீட்பு பணியில் ஈடுபட்ட நிறுவனங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதில் திமுக நிர்வாகியின் Sweater தயாரிக்கும் Companyக்கு பணம் அனுப்பியிருப்பது தெரிய வந்துள்ளது.

SERENDIP SOURCING PRIVATE LIMITED என்ற அந்நிறுவனம் கோகுல் கிருபா என்பவருக்கு சொந்தமானது. திமுக மருத்துவ அணியை சேர்ந்தவர். உள்ளாட்சி தேர்தலில் ரோமானிய குடிமகன் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டிலும், கோகுல் விளக்கம் அளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News