Kathir News
Begin typing your search above and press return to search.

3000 ஆக்சிஜென் கான்சென்ட்ரேடர்ஸ் சுங்க நிலையத்தில் சிக்கியுள்ளது - வைரல் செய்தி உண்மையா?

3000 ஆக்சிஜென் கான்சென்ட்ரேடர்ஸ் சுங்க நிலையத்தில் சிக்கியுள்ளது - வைரல் செய்தி உண்மையா?
X

JananiBy : Janani

  |  4 May 2021 10:22 AM GMT

சமீபத்தில், சமூக ஊடகங்களில் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட 3,000 ஆக்சிஜென் கான்சென்ட்ரேடர்ஸ் சுங்க நிலையங்கள் அனுமதி காரணமாகச் சிக்கியுள்ளதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது. மேக்ஸ் மருத்துவமனை வழக்கறிஞர் கிருஷ்ணன் வேணுகோபாலன், தங்கள் மருத்துவமனைக்குச் சொந்தமான 3,000 ஆக்சிஜென் கான்சென்ட்ரேடர்ஸ் சங்கத்தில் சிக்கியுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.


இதே குற்றச்சாட்டை பல்வேறு ஊடக பயனாளர்கள் பகிர்ந்து வந்தனர்.


இருப்பினும் இந்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி, அனுமதிக்காக 3,000 ஆக்சிஜென் கான்சென்ட்ரேடர்ஸ் காத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தவறானது என்று கூறி தெளிவுபடுத்தியது.

மேலும் சுங்க அதிகாரிகளிடம் இந்து போன்று எந்த சரக்குகளுக்கும் நிலுவையில் இல்லை என்றும் CBIC தெரிவித்தது. சமூக ஊடகங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதனை மறுபரிசீலனை செய்து மற்றும் இதுபோன்ற சரக்குகள் சுங்க அதிகாரிகளிடம் நிலுவையில் இல்லை என்பதை CBIC உறுதியளித்தது.

"இருப்பினும் இந்த புகைப்படம் டிவிட்டரில் பகிராப்ட்டுள்ளதால், இது எங்குள்ளது என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்று வாரியம் தெரிவித்தது.

மேலும் NDTV பகிர்ந்த புகைப்படத்தில், ஹாங்காங்கிலிருந்து பெறப்பட்ட 300 ஆக்சிஜென் கான்சன்ட்ரடோர்ஸ் ஒன்றாகும் அது ஏற்கனவே அகற்றப்பட்டுவிட்டது என்று கூறியிருந்தது. மேலே கூறப்பட்ட 300 ஆக்சிஜென் கான்சன்ட்ரடோர்ஸ் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் ஏப்ரல் 30 2021 யில் ஹாங்காங்கில் இருந்து வந்தது, இது உடனடியாக சுங்க நிலையத்தில் இருந்து அகற்றப்பட்டது.



மேலும் இதுபோன்று ஆக்சிஜென் தொடர்பான பொருட்கள் ஏதேனும் சங்கத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்தால் உடனடியாக தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருமாறு மீண்டும் அனைவரையும் CBIC வலியுறுத்தியது.

source: https://www.opindia.com/2021/05/oxygen-concentrators-max-hospital-stuck-customs-fact-check-ndtv/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News