ஃபைசர் தடுப்பூசி 44% கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தியதா? உண்மை என்ன?
ஃபைசர் தடுப்பூசி 44% கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தியதாக பகிரப்படும் தகவல் உண்மையானதா?
By : Bharathi Latha
ஃபைசர் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் குழந்தைகளை இழந்துள்ளனர். கர்ப்பிணிகளுக்கான சோதனை ஓட்டத்தின்போது இந்த தடுப்பூசியின் போது 44 சதவீத பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. சில பதிவுகள் 44% பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கு தடுப்பூசி என்று கூறுகின்றன. உண்மை நிலையை அறிந்து கொள்ளாத பல அமெரிக்க அரசியல்வாதிகள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஃபைசர் தடுப்பூசி சோதனையில் 44% கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகளை இழந்ததாக ட்வீட் செய்துள்ளார்கள்.
ஃபைசர் சோதனையானது கிட்டத்தட்ட பாதி கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவுகளை ஏற்படுத்தியதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட இணையதளம் கூறுகிறது. மேலும் இந்த செய்தி நிறுவனத்தில் மூலம் பரவி வரும் ஒரு ஸ்கிரீன் ஷாட், 44% கர்ப்பிணிப் பெண்கள் ஃபைசர் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு தங்கள் குழந்தைகளை இழந்ததாகக் கூறுகிறது. Dailyclout CEO டாக்டர் நவோமி வுல்ஃப் என்பவரால் நடத்தப்படும் இணையதளத்தில் தான் இந்த செய்தி பரவிதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் முற்றிலும் இது மறுக்கப்பட்ட தகவல் ஆகும்.
இப்போது, பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சில நேரங்களில் அறியப்படாத காரணங்கள் உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் போன்றோரின் அறியப்படாத தகவல்கள் மூலமாக தற்போது இதுபோன்ற பொய்யான செய்திகள் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை பைசர் தடுப்புசி நிறுவனம் முற்றிலும் மறுத்துள்ளது.
Input & Image courtesy: OpIndia news