Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக நிதி அமைச்சர் தான் 5% GST போடச் சொல்லி பரிந்துரைத்தார் - பி.டி.ஆரின் டபுள் அவதார்

தமிழக நிதி அமைச்சர் தான் 5% GST போடச் சொல்லி பரிந்துரைத்தார் - பி.டி.ஆரின் டபுள் அவதார்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2022 10:42 AM GMT

சண்டிகரில் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு பல பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்த்தப்பட்டது. இதில் பல உணவு பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எல்லா பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டதால் தான், ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வந்தது.

இதனால் பால் பொருட்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து . தனியார் நிறுவனங்கள் தயிர், லஸ்ஸி, மோர் ஆகியவற்றின் விலையை ரூ.4 முதல் ரூ.10 உயர்த்தி உள்ளன.

இந்நிலையில் ஆவின் பொருள்களின் விலையும் உயருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், விலை உயர்த்தும் வாய்ப்பில்லை என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால், ஆவின் பொருள்களின் விலை திடீரென உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசு விதித்த வரி தான் எல்லாத்துக்கும் காரணம் என திமுக அரசு பழி போடப்பார்க்கிறது. உண்மையில் 5 சதவிகித வரி விதிப்புக்கு ஒப்புக்கொண்டது தமிழக நிதி அமைச்சர். அதனை காரணமாக காட்டி பால் வளத்துறை அமைச்சகம் ஆவின் தயாரிப்புகளுக்கு 20 சதவிகிதம் வரை விலை ஏற்றிவிட்டது. ஆனால் ஊடகங்களில் 5 சதவிகித ஜிஎஸ்டி தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது போல செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News