600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவியும் நீட் எழுத வேண்டுமா? திமுக ஐடி விங்கின் அபார அறிவு!

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நீட் எழுத வேண்டிய அவலம் என்று கூறி சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
நீட் தேர்வை எதிர்த்து, இத்தகைய தவறான தகவலை திமுக ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுபோல பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக வெளியான அத்தனை பதிவுகளுமே சாமானிய வாசகர்களை குழப்பக்கூடியதாகவே உள்ளன.
உண்மையில், நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமெனில், அறிவியல் பாடப் பிரிவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எனவே, கலைப் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற நபர் நீட் எழுத முடியாது. இந்த விதிமுறைகள் எதுவும் தெரியாமல், காமர்ஸ் பாடப் பிரிவில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவியும் நீட் எழுத வேண்டுமா?
இந்திய அரசின் கல்விக் கொள்கையின் அவலம் பாரீர் என்பது போன்ற வதந்திகளை சிலர் பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.